கொரோனா வைரஸ், டெல்டா வைரசைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தற்போது ஒமிக்ரான் வைரசின் பாதிப்பிற்கு ஆளாகத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலையில், ஒமிக்ரான் வைரஸ் 129 நாடுகள் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை சுமார் 360 நபர்கள் வரை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அந்த நாட்டில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நிட்சன் ஹோரோவிட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கும், அனைத்து வயதினருடைய சுகாதாரப் பணியாளர்களும் இன்னுமொரு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.




மேலும், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இது ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக மிகவும் முக்கியமானது ஆகும். மிகவும் மதிக்கக்கூடிய பெரியவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். காத்திருக்க வேண்டாம். உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.


இஸ்ரேல் நாட்டில்தான் முதன்முதலில் கொரோனா வைரசுக்கு எதிராக முதன்முறையாக மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில், உலகிலே முதன்முறையாக உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக நான்காவது டோஸ் தடுப்பூசியை இஸ்ரேல் அரசு செலுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அந்த நாட்டின் பிரதமரான பென்னட்டின் அலுவலகம் வெளியிட்ட தகவலில், இஸ்ரேல் நாட்டில் விரைவில் நான்காவது தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ஏற்கனவே தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கும், மூன்றாவது தவணை தடுப்பூசிக்கும் இடையே மூன்று அல்லது ஐந்து மாத இடைவெளி காலம் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் ஒரே மாதத்தில் உலகம் முழுவதும் 169 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகிலே பிரிட்டன் நாட்டில் அதிகபட்சமாக ஒமிக்ரான் வைரசின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்தியாவிலும் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஒமிக்ரான் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பிரதமர் மோடி இன்று சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


மேலும் படிக்க : Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மேலும் படிக்க : மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண