சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்று கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து உலகத்தை சிறைப்பிடித்து வைத்திருந்தது. உலகம் முழுவதும் அந்த தொற்றால் பலர் உயிரிழந்தனர். உயிரிழப்பையும், தொற்று பரவலையும் தடுப்பதற்கு உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின.
கொரோனா முதல் அலையில் பாடம் கற்றுக்கொண்ட உலக நாடுகள் அந்தத் தொற்றின் இரண்டாம் அலையை ஓரளவு சமாளித்தன. ஆனாலும் இரண்டாவது அலையிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இரண்டாம் அலையும் முடிவுக்கு வந்ததால் மனிதர்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும் அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது.
கொரோனாவின் இரண்டு அலைகளுக்கு ஓய்ந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன. ஆனால் அடுத்த அதிர்ச்சியாக ஒமிக்ரான் என்ற தொற்று தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.
கொரோனா வைரஸின் மாறுபட்ட வடிவமான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல்முறையாக கண்டறியப்பட்டது. வேகமாக பரவும் தன்மையை கொண்ட இந்த ஒமிக்ரானை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தாலும் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக இருக்கிறது. பல நாடுகளில் பரவினாலும் இதுவரை எந்த உயிரிழப்பு ஒமிக்ரானால் நிகழாமல் இருந்தது.
இந்நிலையில், பிரிட்டனில் ஒருவர் தற்போது ஒமிக்ரான் தொற்றால் உயிரிழந்திருக்கிறார். இதனால் மக்கள் அனைவரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒமிக்ரான் தொர்ரால் ஒருவர் உயிரிழந்ததை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை என பொருள் கொள்வது தவறு - பூவுலகின் நண்பர்கள்
பரபரப்பை கிளப்பிய வதந்தி.. சமந்தாவுக்கு என்ன ஆச்சு? மேனேஜர் கொடுத்த விளக்கம் என்ன?
பார்ட்டியில் ஜாலி டைம்.. பிரபல நடிகைகளுக்கு கொரோனா - அதிர்ச்சியில் திரையுலகம்..
5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பிய இந்தியா: நன்றி கூறிய தாலிபான்கள்!