பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா தடுப்பு விதிகளை மீறி பல்வேறு கேளிக்கை கொண்டாட்டங்களில் பங்கேற்றதாக அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரை சந்தித்தவர்களையும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த மும்பை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா உறுதி செய்யப்பட்ட பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் கான் மற்றும் அம்ரிதா அரோரா, மும்பையில் பார்ட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் பல கொரோனா விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. நெருங்கிய நண்பர்களான கரீனாவும் அம்ரிதாவும் தங்கள் உடல்நிலை குறித்த விவரங்களை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் படிக்க: Ajith Latest Video: அஜித்துக்கு ஐடியா கொடுத்தாரா... அறிவுரை கொடுத்தாரா போனிகபூர்? அவரே பகிர்ந்த வீடியோ!






கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கரீனாவுக்கும் சயீஃபுக்கும் இரண்டாவது குழந்தை பிறந்தது. அவர்கள் தங்கள் ஆண் குழந்தை வருவதை முன்னிட்டு புதிய வீட்டுக்கு மாறினார்கள். குழந்தைக்கு ஜஹாங்கிர் அலி கான் என்று பெயரிட்டுள்ளனர். மேலும் படிக்க: project K | தடபுடல் விருந்து... செம கவனிப்பு... தீபிகா படுகோனை வரவேற்ற பிரபாஸ்! - வைரலாகும் புகைப்படம்!


கரீனா கபூரின் வரவிருக்கும் படங்கள்


நடிகை கரீனா கபூர் அடுத்ததாக 'லால் சிங் சத்தா'வில் நடிக்கிறார். அமீர் கானுடன் இணைந்து நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 2022ல் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.


இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் கரீனா, திரைப்பட தயாரிப்பாளர்களான ஹன்சல் மேத்தா மற்றும் ஏக்தா கபூர் ஆகியோருடன் கைகோர்த்துள்ளார். மேலும் படிக்க: Rajini Birthday Photo: தனுஷ் மட்டும் மிஸ்ஸிங்... மற்றபடி தடபுடலாய் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் விழா!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண