வடகொரியாவை கிம் ஜாங் உன் ஆட்சி செய்துவருகிறார். தனது தந்தையான் கிம் ஜாங் இல்லின் மரணத்திற்கு பிறகு வடகொரிய அதிபராக பதவியேற்ற கிம்மின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் விவாதப் பொருளாக மாறுபவை.


சமீபத்தில்கூட தனது தந்தையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும்விதமாக பத்து நாள்களுக்கு நாட்டில் யாரும் சிரிக்கக்கூடாது, யாரும் பிறந்தநாள் கொண்டாடக்கூடாது, மது அருந்தக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வடகொரியாவை அதிரவைத்தார். அவர் விதித்த கட்டுப்பாடுகள் உலக நாடுகளிடம் அதிர்ச்சியையும் உருவாக்கியது.




இந்த சூழலில் அந்த நாட்டில் கடுமையான உணவு பஞ்சம் நிலவுவதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.  அதுமட்டுமின்றி நாட்டில் உணவு பஞ்சம் தலை விரித்தாடுவதால் மக்கள் அனைவரும் குறைவாக சாப்பிட வேண்டுமென கிம் உத்தரவிட்டிருப்பதாகவும், அந்நாட்டில் ஒரு கிலோ வாழை பழ விலை 3,100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.


இந்நிலையில் தொழிலாளர் கட்சி கூட்டத்தில் சமீபத்தில் கிம் ஜாங் உன் சமீபத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் உடல் எடை மிகவும் மெலிந்திருந்தார். மேலும், நாட்டுக்காக கிம் ஜாங் உன் குறைவாக சாப்பிடுகிறார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கிம் ஜாங் உன்னின் உடல் எடையை உன்னிப்பாக கவனித்துவருபவர்கள், அவர் 20 கிலோவரை உடல் எடையை குறைத்திருக்கலாம் என்கின்றனர்.




முன்னதாக, பெருமளவிலான உணவு பொருள்களுக்கு சீனாவையே வடகொரியா சார்ந்திருந்தது. ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக சீனா வடகொரியாவுடனான எல்லையை மூடிவிட்டதும் உணவு பஞ்சத்திற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. எல்லை மூடல் மட்டுமின்றி கடந்த ஆண்டு வடகொரியாவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் போன்றவைகளும் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


வடகொரியாவின் உணவு பஞ்சம் குறித்து கணித்துள்ள ஐநா, அந்த நாட்டில் இந்தாண்டு மட்டும் 8 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம் என கூறியிருப்பதோடு, 2025ஆம் ஆண்டுவரை இதே நிலை நீடித்தால் அங்கு மக்கள் பலர் உயிரிழக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Timeline of New Year Welcoming | புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடும், கடைசி நாடும் எது தெரியுமா? ஒரு லிஸ்ட்..


சாலையில் இருந்து தடுமாறி பள்ளத்தில் விழுந்த கார்.. 5 நாட்களாக உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்த மூதாட்டி!