ஸ்வீடனில் காணாமல் போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமியை மும்பையில் இன்ஸ்டாகிராம் நண்பரிடம் இருந்து மும்பை போலீசார் மீட்டனர். 


அவர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகம், குற்ற ஒழிப்பு காவல்துறை குழு மற்றும் பிற ஏஜென்சிகளின் உதவியுடன், மும்பை போலீசார் சிறுமியை அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சனிக்கிழமை ஸ்டாக்ஹோமுக்கு சென்றனர். 


இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் (குற்றம்) மிலிந்த் பரம்ப் கூறுகையில், “நவம்பர் 27ஆம் தேதி ஸ்வீடனில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 17 வயது சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என புகாரளித்தனர். காணாமல் போன மைனர் பெண் மும்பையில் உள்ள தனது இன்ஸ்டாகிராம் நண்பருடன் இருக்கலாம் என்பது தெரிய வந்தது. 




இதையடுத்து, அதிகாரிகள் மங்கள்சிங் சவான், மீரா தேஷ்முக் மற்றும் பலர் அடங்கிய போலீஸ் குழு அமைக்கப்பட்டது. மேலும், குற்ற ஒழிப்பு காவல்துறை குழு டிசம்பர் 4 ஆம் தேதி சிறுமியை காணவில்லை எனவும் மும்பை போலீஸ் தேடி வருவதாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 


தொடர்ந்து கடின உழைப்பின்மூலம் இன்ஸ்டாகிராம் நண்பரை கண்டுபிடித்த போலீஸ் குழு அவரிடம் தொடர்ந்து விசாரனை நடத்தியது. பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது அவர் சிறுமி இருக்கும் இடத்தை போலீசாரிடம் கூறினார். வடகிழக்கு மும்பையில் உள்ள செம்பூரில் உள்ள சீட்டா கேம்ப் பகுதியில் உள்ள சுபாஷ் நகரின் மார்க்கெட் பகுதியில் சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்தார். 


HBD Rajini: மரண மாஸ்.. துள்ளல்.. ஸ்டைல்..! சூப்பர் ஸ்டாரும் இண்ட்ரோ சாங்கும்! பெப்பியான ஒரு ரீவைண்ட்!


இருப்பினும், சிறுமி ஸ்வீடனில் இருந்து மும்பைக்கு எப்படி வந்தார். அவரது பயண ஆவணங்கள் என்ன? அவர் கடத்தப்பட்டாரா அல்லது காதல் வயப்பட்டு மும்பையில் சிறைபிடிக்கப்பட்டாரா? இன்ஸ்டாகிராம் நண்பர் என்று அழைக்கப்படுபவருடன் எப்படி தொடர்பு கொண்டார் என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. 


அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர்,  இண்டர்போல் அதிகாரி யோகேஷ் ஷபாலே கைப்பற்றப்பட்ட தகவல்களை ஸ்வீடன் தூதரகத்துக்கும், டில்லி இண்டர்போலுக்கும் வழங்கினார். 


Headlines Today, 12 Dec: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?.. கேரளாவில் பறவைக்காய்ச்சல்..! இன்னும் சில முக்கியச் செய்திகள்!


இதையடுத்து சுவீடன் தூதரகம் சிறுமி மீட்கப்பட்டது குறித்து சிறுமியின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சிறுமியின் தந்தை டிசம்பர் 10ஆம் தேதி மும்மைக்கு வந்து சிறுமியை அன்று இரவே மீண்டும் அழைத்து சென்றார். உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு நடைமுறைகள் முடிந்தவுடனேயே அவர்கள் ஸ்வீடனுக்கு சென்றனர்” எனத் தெரிவித்தார். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண