பொதுவாக பெரும்பாலனவர்களுகக்கு ஒரு சில விலங்குகளை பார்த்தால் பயம் இருக்கும். அப்படிப்பட்ட விலங்குகளில் பாம்பும் ஒன்று. பாம்பு என்றால் படையே நடங்கும் என்று கூட ஒரு கூற்று உள்ளது. ஆனால் அப்படி எல்லோரும் பயப்படும் பாம்பு உடன் ஒரு சிறிய குழந்தை சுலபமாக விளையாடுவது போல் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் அது வேகமாக வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஸ்னேக் வேர்ல்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் சுமார் 5 வயது மதிக்க தக்க குழந்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்தக் குழந்தை ஒரு நீளமான பாம்பு ஒன்றிடம் எந்தவித பயமும் இல்லாமல் அசத்தலாக விளையாடுகிறது. முதலில் அதன் வாயிடம் கை வைத்து விளையாடுகிறது. அதன்பின்னர் அந்த பாம்பி மீது படுத்து கொண்டு விளையாடுகிறது.
இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். அத்துடன் தற்போது வரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பலரும் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஒரே இரவில் பேய் சூறாவளி.. உருமாறிப் போன கென்டக்கி - 50 பேர் உயிரிழப்பு!