Microsoft : நடப்பு ஆண்டில் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


மைக்ரோசாப்ட் நிறுவனம்:


அதிகரித்து வரும் நெருக்கடி சூழல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 


கடந்த ஜூன் மாத விவரங்களின்படி, வாஷிங்டனை மையாமாக கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தில், உலகம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், 1 லட்சத்து 22 ஆயிரம் அமெரிக்காவிலும், 99 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் உள்ள அதன் கிளை நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். 


இந்நிலையில், கடந்த  ஜனவரி மாதத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் இந்த பணிநீக்கம் செய்யப்பட்டது. 


சம்பளம் இல்லை


இப்படி பணிநீக்கத்தை அறிவித்து வருவதோடு, தற்போது அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்டவைகளை தர மறுத்துள்ளது. அதன்படி, மைக்ரோசாப்ட்  நிறுவனத்தில் வேலை செய்யும் முழுநேர ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டில் சம்பள உயர்வு இல்லை எனவும் போனஸ் தொகையும் குறைப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும், பணி உயர்வு, பங்கு ஒதுக்குதல், பணி நேரம் அதிகரிப்பு போன்றவை இந்த ஆண்டு இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்திக்கான தேவை சரிவு மற்றும் உலக அளவில் நீடிக்கும் பொருளாதார மந்தநிலையும் இதற்கு முக்கிய காரணமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


முன்னணி நிறுவனங்கள் அதிரடி:


உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன. அமேசான் நிறுவனம் உலகம் முழுவதிலும் தனது நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 20 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியது.


அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இவர்களில் பல பேர் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Google BARD AI: இந்தியா உள்பட 180 நாடுகளில் அறிமுகமானது Google BARD AI..! அப்படி என்றால் என்ன?


LinkedIn Layoff : வேலை தேட உதவும் நிறுவனத்திலேயே இப்படியா...? LinkedIn-ல் 700 ஊழியர்கள் பணிநீக்கம்...ஷாக்...!