கூகுள் ஐ/ஓ 2023(Google I/O) நிகழ்வில் கூகுள் அதன் AI கருவியான கூகுள் பார்டுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. ChatGPT க்கு போட்டியாக இப்போது 180+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த வசதி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்துடன் கூடுதலாக, இப்போது கொரிய மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் கிடைக்கிறது. விரைவில் 40+ மொழிகளுடன் இது பெரும் புரட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவு 


நவீன உலகின் சமீபத்திய சென்சேஷன் செயற்கை நுண்ணறிவுதான்(AI). அதிகரித்து வரும் நிறுவனங்கள் பல தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் AI ஐ செயல்படுத்துகின்றன. AI தொழில்நுட்பம் எனப்படுவது எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமானால், ஒரு மனிதனை போல சிந்தித்து வேலையை செய்வது, அதாவது வழக்கமான மனித செயல்முறைகளை தானியங்கிப்படுத்துதல். முடிவெடுப்பதை மேம்படுத்தவும், சுகாதாரம், வங்கி, சில்லறை வணிகம் மற்றும் போக்குவரத்து போன்ற பகுதிகளில் பயனர் அனுபவங்களை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. 






சாட் ஜிபிடி-க்கு போட்டியா?


2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், OpenAI ஆனது ChatGPT எனப்படும் மொழி அடிப்படையிலான AI மாடலை வெளியிட்டது. இது டிஜிட்டல் உலகத்தில் பெறும் புரட்சியை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்குப் பிறகு, இந்த ஃபீல்டில் மிகப்பெரிய நிறுவனமான கூகிள் தனது 'லாங்வெஜ் மாடலை' விரைவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ஒருவழியாக இப்போது அது, இந்தியா உட்பட 180 நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. மற்ற Google பயன்பாடுகளைப் போலவே, பார்டும் டார்க் தீமில் கிடைக்கும். பயனர்கள் பார்டிற்கு டார்க் தீம் பயன்படுத்த தேர்வு செய்யலாம். ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அதே டார்க் தீமையும் பின்பற்றலாம்.


ALSO READ | இனி எல்லா வேலையும் இதுலயே செய்யலாம்! Google BARD AI - ஐ பயன்படுத்துவது எப்படி?


கூகுள் பார்ட் என்றால் என்ன?


கூகுள் பார்ட் என்பது கூகுள் உருவாக்கிய உரையாடல் AI ஆகும். இது LaMDA (உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாடல்) மூலம் இயக்கப்படுகிறது. AI சாட்போட் பார்ட் மூலம், கூகிள் அதன் மொழி மாதிரிகளின் வலிமை மற்றும் தகவல்கள், கண்டுபிடிப்பு ஆகியவற்றுடன் மனித அறிவின் ஆழத்தை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் உமன்மையான மற்றும் துல்லியமான பதில்களை கூகுளால் இணையத்தில் கிடைக்கும் ஏராளமான தரவுகளை பயன்படுத்தி பார்டால் வழங்க முடியும்.






கூகுள் பார்டு அப்டேட்கள் 


பார்டிலிருந்து நேரடியாக தரவுகளை அப்லோட் செய்யும் புதிய வழிகளையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. Google AI சாட்பாட் "Export to Docs" மற்றும் "Draft in Gmail" ஆப்ஷனுடன் வருகிறது. கூகுள் பார்ட், கூகுள் லென்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸிற்கான ஆதரவையும் பெறும், இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காட்சிப்படுத்தவும் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது, முற்றிலும் புதிய வழிகளில் உங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க அனுமதிக்கிறது என்று தெரிகிறது.