New Zealand Fire Accident:  நியூசிலாந்து நாட்டின் மத்திய வெலிங்டனில் உள்ள விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்டு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்டோர் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு விடுதியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


மேலும், 90க்கும் மேற்பட்டார் தீ விபத்தில் சிக்கி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி  இன்னும் தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.




மேலும் படிக்க 


Pakistan Coal Mine Clash : பாகிஸ்தானில் சோகம்... இருதரப்பினருக்கிடையே பயங்கர மோதல்...16 பேர் உயிரிழப்பு...!


IPS Transfer: 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா அதிரடி..


TN Spurious Liquor Death : செங்கல்பட்டிற்கு கள்ளச்சாராயம் வரும் வழி இதுதான்..! தெரிந்தும் கோட்டை விட்டதா போலீஸ்?