MC Donalds : குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியதாக எழுந்த புகாரில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


மெக்டொனால்ட்ஸ்


மெக்டொனால்ட்ஸ் ஒரு புகழ்பெற்ற துரித உணவகம். இது 1940 ஆண்டில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பகுதிகளிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. 1940-ம் ஆண்டு, கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் மற்றும் மோரிஸ் மெக்டொனால்டு சகோதரர்களால் மிகவும் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட `டிரைவ்-இன்' ஹாம்பர்கர் ரெஸ்டாரன்ட்தான் இன்று உலகமே கண்டு வியக்கும் `மெக்டொனால்ட்ஸ்' ஆக செயல்படுகிறது.


புகார்


இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளதாக புகார் எழுந்தது. சுமார் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியதாக புகார் எழுந்தது. மேலும், வேலைக்கு அமர்த்தியதோடு, அதிக நேரம் வேலை செய்ய வைப்பதாகவும், சம்பளம் வழங்காமல் இருப்பதாகவும் புகார் எழுந்தது. 


அபராதம்


இதனை அடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் புகார் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் உள்ள 3 மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனை அடுத்து, 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூறுகையில், "லூயிஸ்வில்லியை தளமாக பாயர் புட் எல்எல்சி  நிறுவனம் 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்தி வருகிறது. அங்கு 16 வயதுக்குட்பட்ட 39 சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட வேலை நேரத்தை விட அதிக நேரம் வேலை செய்வதாகவும், சில நேரங்களில் அதிகாலை 2 மணி வரையும் வேலை செய்து வருகின்றனர். ஆனால் அதற்கான சம்பளத்தை வழங்கவில்லை" என்று தெரிவித்தனர். 


அதேபோல் கென்டக்கியின் வால்டனில் உள்ள மெக்டொனால்டு நிறுவனத்தில் 15 வயதுக்குட்பட்ட 242 குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளர். இந்த குழந்தைகளும் பணி நேரத்தை விட அதிகமான நேரத்தில் வேலை செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வேலைக்கு அமர்த்தப்படும் குழந்தைகள் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை தயாரித்து விநியோகிப்பது, கடைகளை சுத்தம் செய்வது போன்ற பல வேலைகளை செய்துள்ளதாக” விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியதாக எழுந்த புகாரில் 3 மெக்டொனால்ட்ஸ் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்ககது.




மேலும் படிக்க


Russia Ukraine Crisis: அதிபர் புதினை கொல்ல ட்ரோன் மூலம் தாக்குதலா?..வெளியான பகீர் வீடியோ...நடந்தது என்ன?


இந்து மத கடவுள் குறித்து சர்ச்சை கார்ட்டூன்...மன்னிப்பு கேட்ட உக்ரைன்...கொந்தளித்த ரஷ்யா...நடந்தது என்ன?