நம்மில் பலரும் தங்களுடைய விருப்பத்தை விட்டு வேறு ஒரு வேலையில் இருப்போம். மிகவும் குறைந்த சிலர் மட்டுமே தங்களுக்கு பிடித்த வேலையில் இருப்பார்கள். நமக்கு பிடிக்காத வேலையில் இருந்தாலும் அதிலிருந்து வெளியே வந்து பிடித்த விஷயத்தை செய்யும் தைரியம் மிகவும் குறைவானவர்களுக்கு மட்டுமே இருக்கும். அப்படி இளைஞர் ஒருவர் தான் பார்த்து கொண்டிருந்த வேலையை தூக்கி ஏறிந்து விட்டு தனக்கு பிடித்த விஷயத்தை செய்து வருகிறார். அத்துடன் அந்த விஷயத்தை செய்து பல லட்சங்கள் வரை சம்பாதித்து வருகிறார். யார் அவர்? எப்படி இவ்வளவு சம்பாதிக்கிறார். 


 


பென் சான் என்ற நபர் ஒருவர் முதலீட்டு ஆய்வாளராக ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். நல்ல நிலை வேலையில் இருந்த அவருக்கு 2018ஆம் ஆண்டு ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது. அப்போது அவருடைய தாய்க்கு ஒரு நோய் கண்டறியப்பட்டது. இதனால் தன்னுடைய தாய் வீட்டில் இருந்து பார்த்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அப்போது இவருக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தன்னுடைய தாயை பார்த்து கொள்ள முடிவு செய்து தன்னுடைய வேலையை உதறி தள்ளியுள்ளார். 




அதன்பின்னர் அவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதாவது கிரிப்டோ கரன்சி, அதன் முதலீடு தொடர்பாக ஆலோசனை வழங்க ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். அந்த யூடியூப் செனலில் தொடக்கத்தில் குறைவான நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இவருடைய அறிவுரைகள் பலரை சென்றடைந்தவுடன் அந்த சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது அவருடைய செனலை 71 ஆயிரம் பேருக்கு மேல் பின் தொடர்ந்துள்ளனர். 


 


அத்துடன் கடந்த நவம்பர் மாதம் இவர் சுமார் 26 ஆயிரம் டாலர் சம்பாதித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாயை அவர் வருமானமாக சம்பாதித்துள்ளார். இவை தவிர இவருடைய செனலுக்கு பல ஸ்பான்சர்கள், விளம்பரங்கள் என வருமானத்தை ஈட்டியுள்ளார். தன்னுடைய யூடியூப் செனல் தொடர்பாக பென் சான் கருத்து தெரிவித்துள்ளார்.


 


அதில், “நான் தற்போது யூடியூப் செனல் தொடங்கியுள்ளதால் பல விஷயங்கள் தொடர்பாக என்னால் அறிவுரை வழங்க முடிகிறது. அத்துடன் இதன்மூலம் பல ஐடியாக்கள் வருகிறது. மேலும் எனக்கு பிடித்த வழியில் நான் பணம் சம்பாதிக்கிறேன். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


 


 


 


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க.. 


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்


மேலும் படிக்க: 11.5 மில்லியன் ஆவணங்கள்.. உலகையே உலுக்கிய நிதி மோசடி.. `பனாமா பேப்பர்ஸ்’ வரலாறு இதுதான்!!