கடந்த சில ஆண்டுகளாக உறவுகள் அனைவரும் இறந்து போக, அடர்ந்த காட்டில் தனிமையில் வாழ்ந்த பழங்குடி இன மனிதர் சமீபத்தில் இறந்தார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.


மேன் ஆஃப் தி ஹோல்


உலகின் தனிமை மனிதர் என்று பெயரெடுத்த அந்த மனிதர் இறந்துவிட்டதால், இனிமேல் அமேசான் காட்டில் பூர்வ பழங்குடியினர் யாரும் இல்லை என்று உறுதியாகி உள்ளது. மேன் ஆஃப் தி ஹோல் என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார். நிலத்தின் அடியில் குழிதோண்டி அதில் அவர் வாழ்ந்து வந்த காரணத்தால் அந்த பெயரில் அடையாளம் காணப்பட்டார். 



உடற்கூராய்வு


பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, அமேசான் காட்டில் பொலிவியா எல்லையில் உள்ள ரோன்டோனியா மாகாணத்தில் உள்ள தனாரு பகுதியில் இந்த பழங்குடியினத்தின் கடைசி மனிதர் வாழ்ந்து வந்துள்ளார். அந்த கடைசி மனிதரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது என்று தெரிகிறது. 


தொடர்புடைய செய்திகள்: கோடிகளுக்கு அதிபதியாக வலம் வரும் தெருநாய்கள்! ரூ.5 கோடிக்கு சொந்த நிலம்!


இலைகளும் இறகுகளும்


பிரேசில் உள்ள பழங்குடியினருக்கான அமைப்பான புனாய் அமைப்பினர் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து அமேசான் காட்டில் இருந்த அந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதரை கண்காணித்து வந்தோம். இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் உடலில் பசுந்தழைகளையும், பறவைகளின் இறக்கைகளையும் கட்டியிருந்தார். இவ்வாறு அந்த பழங்குடி இனத்தில் கட்டி இருப்பது, அவர்கள் இறப்புக்கு தயாராவதைக் குறிக்கும். அதே போல இம்மாதம் 23ம் தேதி அந்த கடைசி மனிதரின் உடல் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனிதருக்கு ஏறக்குறைய 60 வயது இருக்கும்” ,எனத் தெரிவித்தனர்.



கடைசி அமேசான் பூர்வகுடி


அமேசான் காட்டில் உயிரிழந்த இந்த கடைசி மனிதருடன் முன்பு 6 பேர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளர்களாலும், விவசாயிகளாலும் கொல்லப்பட்டனர். இதனால் தனியாக இருந்த கடைசி மனிதர் வெளியில் வராமல் காட்டின் அடர்ந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பின் அதிகாரி சாரா ஷெங்கர், “அமேசானில் வாழ்ந்த பூர்வபழங்குடியித்தவர்களில் கடைசி மனிதர் இவர்தான். இவரும் தற்போது உயிரிழந்துவிட்டால் பூர்வகுடிகள் யாரும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக யாருடைய கண்களிலும் படாமல் இந்த மனிதர் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். உலகின் தனிமை மனிதராக வலம் வந்த இவர் பெயர் என்ன, என்ன மொழி பேசுவார்கள் என எதுவும் வெளியில் தெரியாது. பூர்வ குடிகளில் பலர் இருந்துள்ளனர். ஆனால், அதில் பலர் விவசாயிகளாலும், ஆக்கிரமிப்பாளர்களாலும் கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்தார். இவரில் இறப்பால் அமேசானில் பூர்வ குடி இனம் அழிந்துவிட்டதாக கூறப்பட்டாலும், அமேசான் ஒரு ஆச்சரிய காடு அங்கு யாருக்குமே தெரியாத பூர்வகுடி இருந்தாலும் இருக்கலாம் என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்