அமெரிக்க பாப்-பாடகி டெய்லர் ஸ்விஃப்ட். இவர் தனது தூங்காத இரவுகள் குறித்து பாடல்கள் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஆங்கில பாப்-பாடகர் என்றாலே, நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது “ஷேப் ஆஃப் யூ” பாடலை எழுதி புகழ்பெற்ற எட் ஷீரான் தான். இவரைப்போலவே பாப்-பாடகர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் டெய்லர் ஸ்விஃப்ட். அமெரிக்க பாப் இசையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துள்ளவர் டெய்லர் ஸ்விஃப்ட். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தன்னுடைய பாடல்களை எழுதி, பாடி, இசையமைத்து அப்போது இளைஞர்களாக இருந்தவர்களையும், தற்போது இளைஞர்களாக வளர்ந்து வருபவர்களையும், தனது பாடல்களை கேட்டு அழவைக்கும், ஆடவைக்கும், சிறிக்கவைக்கும் ஆளுமை கொண்டவர் டெய்லர்! 


இவரது பாடல்களில் பெரும்பாலானவை, காதல் அல்லது காதல் தோல்வி பாடல்களாகத்தான் இருக்கும். காலம் காலமாக சமூகத்தில் நிலவி வரும், “பெண்கள் என்றால் உணர்வுகளை அடக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்ற கருத்தை உடைக்கும் வகையில் அமைந்திருக்கும் இவரது பாடல்கள். 



டெய்லர் ஸ்விஃப்ட்


பிரபலமான பாடல்கள்:


டெய்லர் ஸ்விஃப்டின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் எக்கச்சக்க ரசிகர்கள். இவர் தனது ஆரம்ப காலங்களில் எழுதிய ஆல்பங்களை மீண்டும் ‘ரீ-கிரியேட்’ செய்து சமீபத்தில் வெளியிட்டார். இதில் “ஆல் டூ வெல்” பாடலை குறும்பட வடிவில் தயாரித்து வெளியிட்டார். இதில், வலிமையான வரிகளை வலியுடன் பாடியதால், இப்பாடல் மிகப்பெரிய ‘ஹிட்’ அடித்தது. டெய்லர் ஸ்விஃப்டின் முன்னாள் காதாலரான பிரபல நடிகர் ஜேக் கில்லென்ஹால் குறித்து எழுதியுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. மேலும், இப்பாடலில் அவரை வருத்தெடுக்கும் வகையில் வரிகள் இடம் பெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனைை ஸ்விஃப்ட், மறுக்கவோ ஏற்கவோ இல்லை. 


ஸ்விப்ஃடின் புதிய ஆல்பம்:


தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை, சிறிது ரசனை கலந்து ரெட், 1989, ரெப்பியூடேஷன், ஃபியர்லெஸ் என பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் டெய்லர் ஸ்விஃப்ட்.  அந்த வரிசையில் தற்போது தனது புது ஆல்பத்திற்கான அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஸ்விஃப்ட். இது குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


 






மிட்நைட்ஸ் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில், தூங்காமல் கழித்த 13 இரவுகள் குறித்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆல்பம் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெகு நாட்களாக டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்கள், இந்த அறிவிப்பிற்குப் பிறகு சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.