2019-இல் இறந்த ஆரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்ட்-இன் மனைவி பவுலா ஹர்ட் உடன்தான் பில்கேட்ஸ் தற்போது காதலில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பில் கேட்ஸ் - பவுலா ஹர்ட்
67 வயதான மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், 60 வயது பவுலா ஹர்ட் உடன் ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து வருவதாக பீப்பிள் செய்தி நிறுவனம் கூறியுள்ளது, "பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் டேட்டிங்கில் இருப்பது பரவலாக அறியப்படுகிறது, ஆனால் பவுலா இன்னும் பில் கேட்ஸின் குழந்தைகளை சந்திக்கவில்லை." என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் இருவரும் இணைந்து ஆட்டத்தை பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெருங்கிய வட்டத்திற்கு தெரியும்
"அவர்கள் பிரிக்க முடியாதவர்கள்" என்று புதிய காதலர்களின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒன்றாக இருக்கிறார்கள், பவுலா எப்போதும் ஒரு மர்மப் பெண்ணாகவே இருக்கிறார், ஆனால் அவர்கள் காதல் உறவில் இருப்பது அவர்களின் நெருங்கிய வட்டத்திற்கு தெரியாத விஷயம் இல்லை." என்றார்.
இருவரையும் இணைத்த டென்னிஸ்
பவுலா ஹர்டின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாள் அதோடு போராடி பிறகு அக்டோபர் 2019 இல் தனது 62 வயதில் இறந்தார். பவுலா ஹர்ட் ஒரு ஈவண்ட் ஆர்கனைசராக பணிபுரிகிறார். 'பேஜ் சிக்ஸ் (Page Six)' அறிக்கையின்படி, "பவுலா ஹர்ட் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோர் டென்னிஸ் என்னும் ஒற்றை புள்ளியில் இணைந்தனர், டென்னிஸ் மீதான அவர்களின் அன்பின் காரணமாகவே மார்க்கின் இறப்பிற்கு பின்பு இருவரும் இணைந்தனர்", என்று கூறப்படுகிறது.
பரவிய வதந்திகள்
கடந்த மாதம், மெல்போர்னில் நடந்த, ஜோக்கோவிச் வென்று கிரான்ஸ்ட்லாம் படத்தை வென்ற போட்டியான, ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியை அவர்கள் ஒன்றாக சேர்ந்து கண்டுகளித்தனர். அவர்கள் ஒன்றாக நகரத்தை சுற்றி நடப்பதைக் கண்டபோது அவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவின, ஆனால் அது பவுலா என்று உறுதியாக அடையாளம் காணப்படவில்லை. பவுலா மற்றும் மறைந்த மார்க் தம்பதியருக்கு கேத்ரின் மற்றும் கெல்லி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் மற்றும் பில் கேட்ஸ் திருமணமான 30 ஆண்டுகளுக்குப் பிறகு மே 2021 இல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ஆகஸ்ட் 2021 இல் உறுதி செய்யப்பட்டது, ஆனால் அந்த தம்பதியினர் தங்கள் அறக்கட்டளையான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை தொடர்ந்து நடத்துவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.