விறுவிறுப்பான இடைத்தேர்தல்:


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


இதற்கான வேட்பமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. நேற்று வேட்புமனு சரிபார்க்கப்பட்டது. வேட்பு மனுவை திரும்பப்பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிவித்தது முதல் திமுகவினர் வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  


இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார். ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றார்.


மேலும், அமமுக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா ஆகியோரை அந்தந்த கட்சிகள் அறிவித்தன. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தங்களுக்கான சின்னத்தை ஒதுக்காததால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தார் டிடிவி தினகரன். மறுபக்கம், திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


முதலமைச்சர் பிரச்சாரம்


காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளம்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிப்ரவரி 24,25ஆம் ஆகிய தேதிகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.


பிரச்சார விவரம்


பிப்ரவரி 24


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள பிரச்சார இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,


சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை, வெட்டுகாட்டு வலசு-19வது வார்டு, நாச்சாயி டீகடை, சம்பத் நகர், பெரியவலசு, குளம்-காந்திநகர், அக்ரஹாரம் வண்டிபேட்டை, சத்யா நகர், நெறிகல் மேடு, வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம், கேஎன்கே ரோடு, ராஜாஜிபுரம், மெட்ரால் ஹோட்டல், எல்லை மாரியம்மன் கோயில், முத்துசாமி வீதி, பழனிமலைக் கவுண்டர் வீதி, தெப்பகுளம் ஆகிய இடங்களில் பிப்ரவரி 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


பிப்ரவரி 25


சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை, டிச்சர்ஸ் காலணி வழியாக கிராமடை ஜெகநாதபுரம் காலணி-1, சூரம்பட்டி  நால்ரோடு, பெரியார் நகர் வழியாக ஜவான் பில்டிங், தங்க பெருமாள் கோவில் வீதி வழியாக கள்ளுக்கடை மேடு, பழைய ரயில்வே ரோடு, சமாதானம்மாள் சத்திரம், பேபி மருத்துவமனை வழியாக காரை வாய்க்கால், வளையக்கார வீதி, இந்திரா நகர், கருங்கல்பாளையம், கோட்டையார் வீதி, ரங்கநாதர் வீதி வழியாக சின்னமாரியம்மன் கோவில் மைதானம், காந்தி சிலை, மணிக்கூண்டு, அசோகவுரி, பன்னீர்செல்வம் பார்க், சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் பிப்ரவரி 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.