அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் கல்லூரி மாணவர் ஒருவர் 19 அடி நீள பர்மிய மலைபாம்பை பிடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
ஓஹியோ மாநில பல்கலைக்கழக மாணவர் ஜேக் வலேரி (22),ஒரு பெரிய ஒட்டகச்சிவங்கியின் நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பை பிடித்தார். இவர் 19 அடி நீளமும் 56.6 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை கடந்த திங்கட்கிழமை பிடித்தார். ஊர்வன அளவீடுகளை சேகரிக்க இதை தென் மேற்கு புளோரிடாவில் உள்ள கன்சர்வேன்சிக்கு அவர் கொண்டுச் சென்றார்.இதற்குமுன் கடந்த 2020-ஆம் ஆண்டு இவர் 18 அடி மற்றும் 9 அங்குலம் கொண்ட பாம்பை பிடித்தார்.
வலேரி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் மலைப்பாம்பு அதன் வாலை அவர் சாலையில் இழுக்கும்போது, அந்த பாம்பு அவரை நோக்கி பாய்வதை காணலாம். மாலைபாம்புக்கும், இளைஞருக்கும் இடையே ஒரு யுத்தமே நடக்கிறது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த அவரின் நண்பர்கள் பாம்பை பிடிக்க அந்த இளைஞருக்கு உதவினர்.
வலேரி, தென்மேற்கு புளோரிடாவின் கன்சர்வேன்சியிடம் கூறும்போது, "நாங்கள் பாம்பை அதிகாரப்பூர்வமாக அளவிடுவதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் கன்சர்வேன்சிக்கு கொண்டு வந்தோம். கண்டெடுத்த ஒரு விஷயத்தை அறிவியல் வளர்ச்சிக்கு வழங்க விரும்பினோம். தெற்கு புளோரிடாவின் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அற்புதமானது. சுற்றுச்சூழல் அமைப்பை முடிந்தவரை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். மலைப்பாம்பை பிடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்த போதிலும், அதன் உருவம் சற்று திகிலாக இருந்தது.
கடந்த ஆண்டு நானும் எனது உறவினரும் 18 அடி நீள பாம்பை பிடித்தோம். எனவே இது போன்ற நீளமான பாம்பை நாங்கள் பிடிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க.
Chandrayaan-3 LIVE Updates: சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் - 3: இஸ்ரோ தகவல்..!