Chandrayaan-3 LIVE Updates: சீறிப்பாய்ந்த சந்திரயான்.. மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்..
சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அது பற்றிய தகவல்களை உடனுக்குடன் இங்கு அறியலாம்.
"சந்திரயான்-3 இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் கொண்டு உயர செல்கிறது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தங்களின் விடாமுயற்சிக்கும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன்!" என இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"இஸ்ரோவின் விண்கலம் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகள், பெருமை மற்றும் நம்பிக்கையை சுமந்து செல்கிறது. சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டதால், நம் அனைவரின் இதயங்களும் பெருமிதத்தால் பெருக்குகிறது. அயராத முயற்சிக்கு நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நாள். ஜெய் ஹிந்த்!" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
"நிலவை ஆய்வு செய்யும் நமது மூன்றாவது விண்கலமான சந்திரயான் - 3 வெற்றிகமராக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம். அதன் வெற்றிகரமான பயணத்தின் பின்னால் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது நமது தேசத்திற்கு ஒரு வரலாற்று வெற்றியாகும். ஏனெனில், இந்த பணி விண்வெளி ஆராய்ச்சியில் அற்புதமான முடிவுகளை கொண்டு வரும்" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
"நம் அனைவரின் மகிழ்ச்சி நிலவை தாண்டியுள்ளது. நமது விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் ஈடுபட்ட அனைவரின் மகத்தான புத்தி கூர்மை, அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்புக்கு நன்றி.
இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக உங்கள் ஒவ்வொருவரையும் நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். காங்கிரஸ் கட்சியின் சார்பில், இஸ்ரோவின் அசாதாரண குழுவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
"பெருமையான தருணம், வாழ்த்துகள் இந்தியா! சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துக்கள். இந்த சிறப்பான தருணங்கள் என்றென்றும் நினைவில் இருக்கும்! ஒவ்வொரு இந்தியனும் இன்று பெருமிதம் கொள்கிறான்" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
"சந்திரயான்-3, அதன் துல்லியமான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. விண்கலம் சிறப்பாக செயலாற்றி வருகிறது" என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
"இந்திய விண்வெளித்துறையில் பொன் எழுத்துக்களால் இந்நாள் பொறிக்கப்படும். சந்திரயான் தனது 3வது பயணத்தை துவங்குகிறது. தேசத்தின் கனவு, நம்பிக்கையை சுமந்து செல்கிறது" என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
என்ன ஒரு அசாதாரண சாதனை! ..சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்! விண்வெளி ஆய்வுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, மேலும் இந்த பணி சந்தேகத்திற்கு இடமின்றி புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3, விண்ணில் சீறிப் பாய்ந்து பயணத்தை தொடங்கியுள்ளது என்றும் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பூமியில் இருந்து 179 கி.மீ. உயரத்தில் உள்ள நீள்வட்டப்பாதையில் சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
சந்திரயான் 3, விண்ணில் சீறிப் பாய்ந்து பயணத்தை தொடங்கியுள்ளது என்றும் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், ட்விட்டரில் #Chandrayaan3, #ISRO, #IndiaontheMoon, #MoonMission, WE ARE COMING உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.
நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3, இன்று மதியம் 2:35 மணிக்கு ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3, இன்று மதியம் 2:35 மணிக்கு ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படுவதை நேரில் காண மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருகை தந்துள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இன்னும் 65 நிமிடங்கள் மட்டுமே மீதமுள்ளன
சந்திரயான் விண்கலதிற்கு தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டது. இறுதிக்கட்ட சோதனைகள் அனைத்தும் நிறைவு பெற்று ஏவப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது
அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகிய அமைப்புகள், சந்திரயான் 3-க்காக உலகெங்கிலும் உள்ள பல்வேறு தரை நிலையங்களில் இருந்து தேவையான உதவிகளை வழங்க உள்ளன. ஜெர்மனியில் உள்ள ESOC மிஷன் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பிரெஞ்சு கயானாவில் உள்ள Kourou தரை நிலையம் ஆகியவற்றின் மூலம் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உதவிகளை வழங்க உள்ளது. NASA அமைப்பு டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மூலம் சந்திரயான் 3 திட்டத்திற்கு உதவ உள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “சந்திரயான்-3 ஏவப்படும் ஜூலை 14, 2023 எனும் தேதி எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான் -3 ஒரு குறிப்பிடத்தக்க பணி. இது நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்” என பதிவிட்டுள்ளார்.
சந்திரயான் 3 வெற்றி பெறும்பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் விண்வெளித் துறையில் வளர்ச்சி கிடைக்கும் என்பதோடு, 600 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 50 லட்சம் கோடி மதிப்பிலான விண்வெளி தொழிலில் தற்போது 2 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே பங்களித்து வரும் இந்தியாவின் நிலை மேம்படும் - நம்பி நாராயணன்
சந்திரயான் 3 மூலம் விண்வெளி வியாபாரமே மாறப்போகிறது என இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் பங்கேற்கிறார்.
தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்ள ஒவ்வொரு பகுதியிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் உந்துவிசை தொகுதி 758 வாட்ஸ், லேண்டர் 738 வாட்ஸ் மற்றும் ரோவர் 50 வாட்ஸ் அளவிற்கு ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டுள்ளன.
பெட்டி வடிவிலான லேண்டர் பாகம் நான்கு தரையிறங்கும் கால்களையும், பாதுகாப்பான டச் டவுனை உறுதிசெய்ய பல சென்சார்கள் மற்றும் ஆபத்துகளைத் தவிர்க்க உதவும் கேமராக்களின் தொகுப்பையும் கொண்டுள்ளது. லேண்டரில் எக்ஸ்-பேண்ட் ஆண்டெனாவும் பொருத்தப்பட்டுள்ளது, இது தகவல் தொடர்புகளை உறுதி செய்யும். ரோவர் செவ்வக வடிவில் உள்ளது, மேலும் ஆறு சக்கரங்கள் மற்றும் ஒரு வழிசெலுத்தல் கேமராவும் இடம்பெற்றுள்ளது.
விநாடிக்கு 3 மீட்டர் வேகத்தில் தரையிறங்கினாலும் சேதமடயாத வகையில் லேண்டரின் கால்கள் வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன
சந்திரயான்-3 விண்கலத்தின் வாழ்நாள் நிலவில் ஒருநாள் என்றால் அது பூமியின் 14 பூமி நாட்களுக்கு சமம்.
ரூ.615 கோடி மதிப்பிலான சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் தான் வீரமுத்துவேல். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், சந்திரயான் 2 திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார்
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற உள்ளது
சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,900 கிலோகிராம் எடை கொண்டது. இதில் உள்ள உந்துவிசை பகுதி 2,148 கிலோ எடையும், லேண்டர் பகுதி 1,758 கிலோ எடையும் மற்றும் ரோவர் 26 கிலோ எடையும் கொண்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவில் தரையிறங்கிய நிலையில், நான்காவதாக இந்தியா அந்த சாதனையை எட்டிப் பிடிக்க உள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வின் நேரலை, இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்திய நேரப்படி பிற்பகல் 2:00 மணிக்கும், டிடி நேஷனலில் மதியம் 1:50 மணிக்கும் தொடங்கும்.
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான Launch Vehicle Mark III (LVM3) என்றும் அழைக்கப்படும் Geosynchronous Satellite Launch Vehicle Mark III (GSLV Mk III), சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரனை நோக்கி சுமந்து செல்ல உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தோல்வியுற்ற நிலையில், இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களின் 4 ஆண்டு கால கடின உழைப்பில் சந்திரயான் 3 விண்கலம் உருவாகியுள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில், பொதுமக்கள் நேரலையில் காணலாம்.
Background
சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதன் நேரலையை எங்கு, எப்போது காணலாம் என்பது தொடர்பான விவரங்களை இங்கு அறியலாம்.
சந்திரயான் 3 விண்கலம்:
140 கோடி இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளுமே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான் 3 விண்கலத்தை உற்று நோக்க தொடங்கியுள்ளன. இதற்கான 25 மணி நேரம் 30 நிமிடங்கள் அளவிலான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2:35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
நிலவை ஆராயும் சந்திரயான்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ. 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
சந்திரயான் 3 திட்டம்:
சந்திரயான் 3 தயார் செய்யும் பணிகள் மிகவும் திவிரமாக இஸ்ரோ மேற்கொண்டது. குறிப்பாக கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சியிலும் விஞ்ஞானிகள் செயல்பட்டனர். அந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சந்திரயான்-3 மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் இன்ஜினின் சோதனை அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.
விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3:
இப்படி பலமுறை சோதனை செய்யப்பட்ட பின் இன்று ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து மதியம் 2.35 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சந்திரயான் 2 தோல்வியில் இருந்து கிடைத்த பல்வேறு படிப்பினைகள் அடிப்படையில், சந்திரயான் 3 கட்டமைப்பு, தொழ்ல்நுட்பம் என பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த முயர்சி நிச்சயம் வெற்றி பெறும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவ தொடர்ந்து நிலவில் கால் பதிக்கப் போகும் நான்காவது நாடு எனும் பெருமையை இந்தியா பெறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -