உழைப்பிற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழும் நாடு ஜப்பான். இந்த நாட்டில் உள்ள பள்ளிகளில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் போனி டெய்ல் மாடலில் தலைமுடியை சீவி வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம்தான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாணவர்கள் இவ்வாறு போனி டெயில் அணிந்து வந்தால், பள்ளியில் உள்ள மாணவர்கள் மாணவிகளின் கழுத்தைப் பார்த்து பாலியல் உணர்வு தூண்டப்படுவதற்கு ஆளாகிறார்களாம். இதன் காரணமாகவே மாணவிகள் போனி டெயில் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த வித்தியாசமான நடைமுறை அந்த நாட்டில் உள்ள புகுவோகா மாகாணத்தில் தான் உள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள தலா 10 பள்ளிகளில் ஒரு பள்ளிகளில் போனிடெயில் சட்டவிரோதமாக உள்ளது. இந்த விதிமுறைகளுக்கு அங்குள்ள நடுநிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்.மாணவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஜப்பானில் உள்ள பப்ளிக் பள்ளிகள் மிகவும் அபத்தமான ஆடைக்கட்டுப்பாட்டை விதித்தற்காக கடும் விமர்சனங்களை சந்தித்தது. கடந்தாண்டு வெள்ளை உள்ளாடைகள் விதியை பள்ளிகள் ரத்து செய்தது. இதன்படி, பள்ளியில் உள்ள சில ஊழியர்கள் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிக்காக ஆடை மாற்றும்போது அவர்களின் உள்ளாடையை சரிபார்ப்பார்கள். சிலர் மாணவிகளின் மேல் உள்ளாடைகளின் பட்டையை பிடித்து இழுக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இது மனித உரிமைக்கு எதிரானது என்று கண்டனங்கள் வலுத்தது.
இதையடுத்து, இந்த உள்ளாடை தொடர்பான விதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் உள்ளாடைகளின் நிறம் குறித்து சோதிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
மேலும் படிக்க : AI Chatbot Save Marriage life: பிரசவத்தால் ஏற்பட்ட அழுத்தம்.. விவாகரத்து முடிவு.. AI டெக்னாலஜியால் சேர்ந்த கதை.. விறுவிறுன்னு ஒரு கதை
மேலும் படிக்க : Lockdown in China: சீனாவில் மீண்டும் புதிய வைரஸ்: ஊரடங்கு அமலால் பரபரப்பு.. மறுபடியும் முதல்ல இருந்தா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்