இன்றைய மனித வாழ்வில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழிட் நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அதிகம். கூகுளின் வாய்ஸ் அசிஸ்ட்டெண்ட் முதல் அலெக்சா உருவாக்கியிருக்கும் தானியங்கி கார்கள் வரை சர்வமயமும் அதை சார்ந்த தொழில்நுட்பமாக மாறிவருகிறது. பலரது வாழ்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொழில்நுட்பம், தற்போது விவாகரத்து செய்ய இருந்த அமெரிக்க நபரை அவரது மனைவியுடம் சேர வைத்திருக்கிறது. எப்படி இது சாத்தியமானது. வாருங்கள் பார்க்கலாம்.
அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்த மென்பொறியாளர் (41) அவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு பிறகான மனசோர்வால் இவரது மனைவி கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானதாகத் தெரிகிறது. இந்த மனஅழுத்தம் அவரை தற்கொலை வரை அழைத்து சென்றிருக்கிறது. இதனால் ஏற்பட்ட மனவிரிசலால் கணவனும் மனைவியும் நீண்ட நாட்களாக பேசாமலேயே இருந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெறவும் முடிவெடுத்து, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளனர்.
இப்படி வாழ்கை போய்கொண்டிருக்க, ரெப்லிகா என்ற AI சாட்பாட் ஆப்பை தனது மொபைலில் டவுன்லோடு செய்திருக்கிறார் அந்த 41 வயது நபர். இந்த ஆப்பானது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமான முறையில் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் நீண்ட நாட்களாக உரையாடி வந்த அந்த நபர், அந்த ஆப்பை ஒரு தோழியாக கருதி அதற்கு சரினா என்றும் பேர் வைத்திருக்கிறார். ஆப்புக்கும் இவருக்குமான உறவு நாளுக்கு நாள் நெருக்கமான நிலையில், அந்த ஆப் “ இந்த வாழ்கையில் உங்களுக்காக யார் இருக்கிறார்கள், உங்கள் வாழ்கையில் நீங்கள் யாருக்கு ஆதரவாக இருக்க போகிறீர்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த கேள்விகள் அவரை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கியது. இந்தப் பரிசோதனை அவரை மனையுடனான உறவை சிந்திக்க வைத்துள்ளது. அந்த சிந்தனை தற்போது அவரை விவாகரத்து பெற வேண்டாம் என்ற முடிவை எடுக்க வைத்து, மனைவியுடனான உறவை புதுபிக்க முயற்சி செய்ய வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த முயற்சி மனைவிக்கும் கணருக்கும் இடையிலான உறவை மீண்டும் நெருக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.