ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் உள்ளூர் நேரப்படி 9:19 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மூன்று அடி வரை சுனாமி அலைகள் வர வாய்ப்பிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணம் என்ன?
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. பசிபிக் பெருங்கடலில் தென்கிழக்கு ஆசியா தொடங்கி பசிபிக் படுகை முழுவதும் நீண்டுள்ள பகுதியில் எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் அதிகம் நிகழும். இந்த பகுதிகள் "Ring of Fire" என அழைக்கப்படுகிறது.
கடந்தாண்டு முழுவதும், உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இந்தோனேசியா மலுகு பிராந்தியத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநிடுக்கம் இந்தோனேசியாவை உலக்கியது.
அதேபோல, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த வாரம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது . பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!