ISRO Spadex: சாதனை நுனியில் இஸ்ரோ.! விண்வெளியில் 3மீ இடைவெளியில் 2 செயற்கைக்கோள்கள்
ISRO Spadex Satellites Docking: இஸ்ரோ 3மீ தொலைவு வரை 2 ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள்களை அருகில் கொண்டு வந்து, சோதனையை செய்த நிலையில், சில மணி நேரங்களில் சாதனையை படைக்கவுள்ளது.

ISRO Spadex Satellites Docking Mission: ஸ்பேடக்ஸ் திட்டம் மூலம் 2 செயற்கைக்கோள்களை இணைத்து பரிசோதனை முயற்சியில் இறுதி கட்டத்தை இஸ்ரோ நெருங்கியுள்ளது. உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே, இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்நிலையில் ,நான்காவது நாடாக அந்த சாதனையை படைக்கும் முயற்சியில் இன்னும் சில மணி நேரங்களில் படைக்கும் என இந்தியர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்விண்கலம் ஏ (SDX01) மற்றும் விண்கலம் B (SDX02) ஆகிய இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு, 15 நிமிட பயணத்திற்குப் பிறகு பூமிக்கு மேலே 475 கிமீ தொலைவில், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
.
விண்வெளியில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து PSLV-C60 ராக்கெட் மூலமாக, ஸ்பேஸ் டாக்கிங் சோதனைக்காக இரண்டு செயற்கைகோள்களை, கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு விண்ணில் செலுத்தியது. புவியீர்ப்பு விசை குறைவாக உள்ள இடமான விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்யும் சோதனையும், இதில் அடங்கும். இந்த திட்டமானது, தட்டை பயிறை கொண்டு இலைகளை முளைக்க வைத்து வெற்றியை படைத்தது, அசத்தியுள்ளது இஸ்ரோ.
ஸ்பேடக்ஸ் திட்டம்
மேலும், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் போற்றப்படும் SpaDeX பணியானது, மிக முக்கியமான திட்டமும் இதில் அடங்கியுள்ளது. ஸ்பேடக்ஸ் திட்டம் என்பது விண்வெளியில் தனித்தனியே சுற்றி வரும் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் திட்டமாகும். மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பம், செயற்கைக்கோள் சேவை மற்றும் எதிர்காலப் பணிகளான ககன்யான் திட்டம் மற்றும் இந்தியாவிற்கான விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்றவற்றில் நாட்டின் திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2035க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன; இதற்கு SpaDeX முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
3 மீ நெருக்கத்தில் செயற்கைக்கோள்கள்
இந்நிலையில், விண்ணில் உள்ள பல நூறு கி.மீ தொலைவில் உள்ள இரண்டு செயற்கைக்கோள்களை , இணைக்கும் முயற்சியில் , தற்போது 3 மீ தொலைவு வரை அருகில் கொண்டு வந்துள்ளது, பின்னர் சற்று பின் தூரம் சென்றும் சோதனை நடத்தியுள்ளது.
இந்த தருணத்தில் , உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் , இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியானது, சில மணி நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இஸ்ரோவின் அந்த வெற்றிச் சாதனை அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் பலரும்.