ஜப்பானில் உள்ள ஹோட்டலில் தட்டில் பரிமாறப்பட்ட மீன் உயிருடன் இருந்தது. அது வாயைத் திறந்து சாப்ஸ்டிக்கை கடித்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் ஜப்பானின் யானகாவாவில் உள்ள ஹோட்டலில் நடந்ததாக பதிவின் தலைப்பில் கூறப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


வைரலான வீடியோ முதலில் இன்ஸ்டாகிராமில் டகாஹிரோ என்ற பயனரால் வெளியிடப்பட்டது. பின்னர் ரஷித் அல்சுவைடி என்ற பயனரால் மறுபகிர்வு செய்யப்பட்டது. வீடியோவில், சாலட் இலைகள் மற்றும் மீன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தட்டு காணப்படுகிறது. ஒருவர் மீனைச் சாப்பிடும் தருணத்தில், அது வாயைத் திறந்து குச்சியை பிடித்தது.


மேலும் படிக்க: Skating: கால்பந்து வைத்து விளையாடும் ஸ்கேட்டிங் வீரர்.. வைரல் வீடியோ


இணையத்தில் பகிரப்பட்ட பிறகு, வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல கருத்துகளை கூறிவருகின்றனர்.அவர்களில் பெரும்பாலோர் அதிர்ச்சியடைந்தனர் அல்லது குழப்பமடைந்தனர்.


“என்ன அது? பச்சையாக உண்பதா? அல்லது சமைத்ததா?” ஒரு நெட்டிசன் பதிவிட்டிருந்தார்.


 


 


இந்த வீடியோவை நீங்களும் பாருங்க


 






 


 


மேலும் படிக்க: Tiktok Love: சிறையிலிருக்கும் இளைஞருடன் டிக்டாக் மூலம் காதலில் விழுந்த பெண்.. !


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண