Tiktok Love: சிறையிலிருக்கும் இளைஞருடன் டிக்டாக் மூலம் காதலில் விழுந்த பெண்.. !

சிறையில் இருக்கும் நபருடன் டிக்டாக் மூலம் பெண் ஒருவர் காதல் வையப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்த உலகில் பலரும் பல தரப்பட்ட விதங்களில் காதல் வயப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக டிஜிட்டல்  காலத்தில் சிலர் செயலிகள் மூலம் சந்தித்து காதலித்து வருகின்றனர். அப்படி மீண்டும் டிக்டாக் செயலி மூலம் ஒரு காதல் ஒன்று மலர்ந்துள்ளது. 

Continues below advertisement

 

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் அபரிதீன்(29). இந்த பெண்ணிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இவருக்கு சில மனநல பிரச்னைகள் இருந்துள்ளது. அதற்காக இவர் மருத்துவர்களிடம் ஆலோசனையையும் பெற்று வந்துள்ளார். அதைத் தொடர்ந்து மீண்டும் நன்றாக குணம் அடைந்துள்ளார். அதன்பின்னரும் இவருக்கும் தனிமை மிகவும் பெரிய சோகமாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் அந்தப் பெண் டிக்டாக் செயலி மூலம் ஒரு நண்பர் கிடைத்துள்ளார். 


அவர் தன்னுடைய தனிமை நேரங்களில் மொபைல் போனில் இருந்த டிக்டாக் செயலியை பார்த்து வந்துள்ளார். அப்போது அதில் ஒரு ஆண் பேசும் வீடியோவை பார்த்துள்ளார். அவரை பார்த்தவுடன் இவருக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அந்த பக்கத்தை தேடியுள்ளார். அது அமெரிக்காவில் சிறையில் இருப்பவர்களை மக்களுடன் இணைக்கும் பக்கம் என்று தெரியவந்துள்ளது. 

 

அதன்பின்பு அந்த பக்கத்தில் பேசிய நபர் லெவின் என்பதும் தெரியவந்துள்ளது. அவருடன் அபரிதீன் பேச தொடங்கியுள்ளார். முதல் நாள் இருவரும் குறுஞ்செய்தி மூலம் பேசியதாக தெரிகிறது. அதன்பின்னர் அவர்கள் இருவரும் வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதுகுறித்து அபரிதீன், “லெவின் சிறையில் இருக்கிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர் தான் செய்த குற்றச்சம்பவத்தை என்னிடம் மறைக்கவில்லை. அவரும் என்னைப்போல் சிறையில் தனிமையில் உள்ளார். ஆகவே அவர் மீது எனக்கு அன்பு அதிகரித்துள்ளது. அவரை தற்போது சிறை விதிகள் காரணமாக என்னால் சந்திக்க முடியாது. அவர் வரும் டிசம்பர் மாதம் பரோலில் வருகிறார். அப்போது அவரை சந்திக்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். சிறையில் இருக்கும் நபர் ஒருவருக்கு டிக்டாக் செயலி மூலம் காதல் மலர்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola