உலகம் முழுவதும் அதிகமான நபர்கள் பின் தொடர்ந்து வரும் விளையாட்டுகளில் ஒன்று கால்பந்து. சுவட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல பனிச்சறுக்கு வீரர் ஆண்ட்ரி ரகேட்டரி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பனிச்சறுக்கு செய்யும் போது கால்பந்து வைத்து விளையாடும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


அவரின் இந்த வீடியோவை அவருக்கு பிடித்த கால்பந்து அணியான ரியல் மேட்ரிட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆண்ட்ரி ரகேட்டரி பந்தை கையில் வைத்து கொண்டு சில தூரம் பனிச்சறுக்கு செய்கிறார். அதன்பின்னர் தன் கையில் இருக்கும் கால்பந்தை வைத்து அவர் பனிச்சறுக்கு செய்து கொண்டே சாகசம் செய்கிறார். 






இந்த வீடியோவை ரியல் மேட்ரிட் தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில் சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண