பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு. நம்பிக்கை இல்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் உரையாடிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்றும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். எனது ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி நடந்தது அம்பலமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கானை தோற்கடித்து ஷெபாஸ் ஷெரிப்பை பிரதமராக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வந்தனர். . பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிப்பின் சகோதரர்தான் இந்த ஷெபாஸ் ஷெரிப்.
மேலும், எதிர்க்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நடக்கும் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. இம்ராம் கான் தன் ஆட்சியைத் தக்க வைக்க, நாடாளுமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூப்பிப்பாரா, அப்படி நடக்கவில்லை என்றால் பாகிஸ்தானில் புதிய தேர்தல் நடத்தப்படுமா, அல்லது எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க அனுமதி கோருமா என்ற பல கேள்விகள் எழுந்தது.
பாகிஸ்தான், கடந்த ஆறு மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கட்டியை சந்தித்து வருகிறது.அங்கு நிலவும் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு,ஆகியவற்றின் காரணமாக பிரதமர் இம்ரான் கான் மீது கடும் எதிர்ப்பு எழுந்தது. பாகிஸ்தான் நாட்டின் பண மதிப்பு 189.79 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடும் அரசியல் நெருக்கடியால், நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியது.
இம்ரான் கான் பதவி விலகுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அப்படி ஏதும் முடிவெடுக்கவில்லை. இந்நிலையில், இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லாம் தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது.
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லை. கூட்டணி கட்சியான பாகிஸ்தான் முத்தாஹிதா ரூவானி இயக்கம் கட்சி, இம்ரான் கான் தலைமையிலாம ஆட்சிக்கு தனது ஆதரவை திரும்ப பெற்றது.
நாடாளுமன்றத்தில் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை மொத்தம் 342. இதில் ஆட்சி அமைக்க, பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 172 ஆகும்.- ஆனால், தெஹ்ரிக் கட்சியிருக்கும் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையோ சுமார் 160தான். இந்நிலையில் இம்ரான்கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்