ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள்  கைப்பற்றியுள்ளதால், அந்நாட்டில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வருவதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தனார். இதனால், முழு நாட்டையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள காரணத்தால், நாட்டு மக்களும், அந்த நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டினரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.


ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் பதற்ற சூழல் நிலவி வருவதால், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் குவிந்துள்ளனர். இதனால், காபுல் விமானநிலையத்தில் பதற்ற நிலை நிலவுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.  கூட்டம் கூட்டமாக காபுல் விமானநிலையத்தில் குவிந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு வெளியேற போராடி வருகின்றனர். தினம் தினம், மனதை பதைபதைக்க வைக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.






இந்நிலையில், ஒரே விமானத்தில் கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேற போராடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரீச் சி-17 ரக விமானத்தில், கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறி உள்ளனர். போயிங் ரக விமானமான இந்த விமானத்தில், ஒரே நேரத்தில் அதிக மக்கள் பயணம் செய்துள்ளனர். காபூலில் இருந்து புறப்பட்ட விமானம், கத்தாரில் தரை இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பண மழையில் நனையும் தலிபான்கள்... இவ்வளவு பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?


ரீச் சி-17 விமானத்தை இயக்கும் அதிகாரிகள், அதிக அளவிலான பயணிகளை ஏற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர். எனினும், முட்டிமோதிக் கொண்டு விமானத்திற்குள் ஏறிய மக்களை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். 


முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க, C-17 வகை இந்திய ராணுவ விமானம் காபூல் விமான நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. காபூல் விரைந்த அந்த விமானம், 120 இந்தியர்களை மீட்டு இந்தியா திரும்பி உள்ளது. அந்த விமானத்தில், இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உட்பட பிற இந்திய அதிகாரிகள் நாடு திரும்பி வருகின்றனர். மேலும், தற்போதைக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசு உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டுடனான உறவுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏன் இந்த மெளனம்? மனம் உருகவைத்த ஆஃப்கன் இயக்குநரின் பதிவை பகிர்ந்த அனுராக் காஷ்யப்!