Imran khan : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்தபோது அவரை கொலை செய்ய சதி நடந்ததாக அவரது வழக்கறிஞர் பரபரப்பான தகவலை தெரிவித்தார்.


இம்ரான் கானுக்கு ஜாமீன்


பாகிஸ்தான்: இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நேற்று முன்தினம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இமரான் கான் வந்திருந்தார். அப்போது துணை ராணுவ படையினர் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து இம்ரான் கானை கைது செய்தனர். நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.


இம்ரான் கான் கைது செய்யப்பட்டதோடு அதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். 


இதனை அடுத்து, இம்ரான் கானை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு இரண்டு வார காலம் ஜாமீன் வழங்கியுள்ளது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்.


பகீர் தகவல்கள்


இம்ரான் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டாலும், சிறையில் அவருக்கு நடந்த சில சம்பவங்கள் பற்றியான பகீர் தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி இம்ரான் வழக்கறிஞர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்படி, சிறையில் அவரை கொல்ல சதித்  திட்டம் நடப்பதாகவும், மாரடைப்பு ஏற்படுத்துவதற்காக அவருக்கு இன்சூலின் ஊசி செலுத்தப்பட்டதாகவும் இம்ரான் கான் வழக்கறிஞர் கூறினார்.  இதனால் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இது அனைத்துமே National Accountability Bureau காவலில் இருந்தபோது நடந்ததாக வழக்கறிஞர் கூறினார்.


மேலும், ”அவரை கொலை செய்ய முயற்சித்தனர். அதிகாலை 3 மணிக்கு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முதல் சாப்பிடக் கூட ஒன்று கொடுக்கவில்லை. இம்ரான் கானை தூங்கவும், அவரை கழிவறையை கூட  பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதுமட்டுமின்றி படுக்கை கொடுக்காமல், ஒரு அசுத்தமான அறையில் அவரை அடைத்து வைத்ததாகவும் அவருக்கு உணவிலும் இன்சூலின் கலக்கப்பட்டதாகவும்” இம்ரான் கான் வழக்கறிஞர் கூறினார்.


இம்ரான் கான் கைதுக்கு பின்னணியில் ராணுவமா?


பாகிஸ்தானை பொறுத்தவரையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை காட்டிலும் ராணுவமே அதிகாரம் மிக்க அமைப்பாக திகழ்கிறது. ராணுவத்தின் உதவியோடு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த இம்ரான் கான், பின்னர், ராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, இம்ரான் கான் கைதுக்கு பின்னணியிலும் ராணுவம் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.




மேலும் படிக்க


The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு’ - தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!