மூளையை கசிக்கிப் பிழிந்து யோசித்து பதிவிட்டபடி குழம்பிக் கொண்டிருக்கும் மனிதர்கள் உலாவும் இணைய உலகில், எளிமையான பெரிதும் சிந்திக்காத க்யூட் விலங்குகளின் செய்கைகளும் அவற்றின் வீடியோக்களும் சமீப காலமாக இணையத்தில் ஹிட் அடித்து வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக அமெரிக்காவின் பிரபல 7 லெவன் ஸ்டோரின் கிளை ஒன்றில் முன்னதாக கரடி ஒன்று சாக்லேட்டுகளை எடுத்து கமுக்கமாக சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒலிம்பிக் வேலி எனும் இடத்தில் உள்ள இந்த 7 லெவன் ஸ்டோரின் கிளையில் இந்தக் கரடி இரவு நேரத்தில் நுழைந்துள்ளது. இரவு நேரத்தில் வேலையில் இருந்தவர் கடை கதவை மறந்து திறந்துவைத்துவிட்ட நிலையில், கமுக்கமாக கடைக்குள் நுழைந்து சாக்லேட்டுகளை கமுக்கமாக எடுத்து மறைத்து வைத்தும் சாப்பிட்டபடியும் இந்தக் கரடி சிறிது நேரம் உலா வந்துள்ளது.

இந்நிலையில் கரடி மீதான பயத்தைத் தாண்டி அதன் இந்த க்யூட் செய்கை இணையத்தில் முன்னதாக ஹிட் அடித்துள்ளது.

இதேபோல் முன்னதாக வெளிநாட்டில் காட்டு யானையிடம் மாட்டிய கார் சிக்கி பாடுபடும் திக் திக் வீடியோ ஒன்று முன்னதாக இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் ட்ரோல்களையும் இணையத்தில் பெற்றது.

Buitengebieden எனும் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் தன் உடலில் ஏற்பட்ட அரிப்பால் யானை உடலை காரில் தேய்த்துக் கொண்டுள்ளது.

 

ஆனால் காரின் உள்ளே இருப்பவர்களின் நிலைமை கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. உடல் அரிப்பால் கார் பேனட்டில் உட்கார்ந்து தேய்த்தும், தன் பெரிய கால்களை காரின் டயரில் வைத்து தேய்த்து கார் மீது ஏறவும் யானை முயற்சிக்கும் இந்த வீடியோ ஒருபுறம் சிரிப்பை  வரவழைத்து கேலிக்கும் ஆளாகியுள்ளது.

இறுதியாக தப்பித்தோம் பிழைத்தோம் என தன் சேதாரமான காருடன் ஓட்டுநர் உயிரைக் கையில் பிடித்தபடி ஓட்டிவரும் இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


மேலும் படிக்க: House of the Dragon: நம்ம வீட்டுப் பெண் ரெனேராவோட கல்யாணம்... பாரம்பரிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் கல்யாணம்... மீம்ஸ் இறக்கும் நெட்டிசன்கள்!

Watch Video: ”வீராங்கனைகள் ஏன் ஷார்ட்ஸ் போடணும்.. லெக்கிங்ஸ் போடலாமே..”: கேள்வியெப்பிய செய்தியாளர்.. வறுத்த நெட்டிசன்கள்

Published at: 21 Sep 2022 04:26 PM (IST)