காடுகளின் வழியே சஃபாரி பயணம் மேற்க்கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது. விலங்குகள் , பறவைகள் , இயற்கை என அதோடு இயைந்த பயணம் அத்தனை அலாதியானது. அதோடு நாம் புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் மட்டுமே பார்த்த ஒரு விலங்குகளை அருகில் பார்த்தால் அது திகைப்பாகத்தானே இருக்கும். நமக்கே இப்படியென்றால் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். அப்படியான ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெருப்புக்கோழி அளவில் பெரியவை . சராசரி மனித உயரத்தை தாண்டியும் வளரக்கூடியவை. இந்த ஈமுக்கோழிகள் சற்று ஆக்ரோஷமானவை என்ற புரிதல் சிலருக்கு உண்டு. ஆனால் அதனை தகர்த்திருக்கிறார் 3 வயது சிறும் எம்மா. அலமோவில் உள்ள டென்னசி சஃபாரி பூங்காவில் தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார் எம்மா. அப்போது நெருப்புக்கோழி நிறைந்த பகுதிக்கு வந்திருக்கின்றனர். அங்கு ஒரு வெள்ளை நிற பெட்டியில் அடைக்கப்பட்ட நெருப்புக்கோழி தீவனங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. காரில் அமர்ந்த படியே , கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டப்படி சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவிற்கு அங்கிருக்கும் கோழிகள் நன்கு பழக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் 3 வயது சிறுமி எம்மாவும் , தனது கையில் வெள்ளை நிற பெட்டியில் வைத்திருகும் உணவுகளை நெருப்பு கோழிகளுக்கு வழங்குகிறார்.
கார் ஜன்னல் வழியாக தலையை நீட்டியபடி அந்த உணவுகளை நெருப்பு கோழி சாப்பிட , உற்ச்சாகமடைகிறாள் எம்மா. உடனே நெருப்பு கோழியின் தலையை கட்டி அனைத்துக்கொள்கிறார். பொதுவாக நெருப்பு கோழிகளை சீண்டினால் அவை தனது அலகினால் ஒரு கொட்டு வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடும் . ஆனால் இந்த வீடியோவை பாருங்கள்! ஏதோ குழந்தையின் அன்பை புரிந்தவர் போல , எம்மாவின் பிடியில் இருந்து இலகுவாக விடுபட்டு அங்கிருந்து இயல்பாக நகர்ந்துவிடுகிறது நெருப்புக்கோழி. உடனே எம்மா “நான் அதை செய்துட்டேன்...நான் அதை செய்துட்டேன் “ என ஆங்கிலத்தில் கத்த, அங்கிருந்தவர்கள் சிரிக்கின்றனர்.
வீடியோ :
ஏனென்றால் எம்மாவுக்கு பெரிய பறவைகளை கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பல நாள் விருப்பமாக இருந்தது என்கிறார் அவரது அம்மா தபாதா லின் காலின்ஸ். மேலும் பேசிய அவர் “ எங்களுக்கு எப்போதுமே நெருப்புக்கோழி என்றால் பயம். ஆனால் அது எம்மாவுக்கு இல்லை.அவள் பெரிய பறவையை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள் அதை செய்தே விட்டாள். நாங்கள் அனைவரும் திகைத்துப் போனோம். என்றார். இது குறித்து பூங்கா அதிகாரிகள் தெரிவிக்கையில் ,” இங்குள்ள ஈமு கோழிகள் மற்றும் நெருப்புக்கோழிகள் ஆபத்தானவை அல்ல. அவை எப்போதுமே சுற்றிப்பார்க்க வருபவர்களிடம் உணவுகளை மட்டுமே எதிர்பார்க்கின்றன” என்றார்.