உப்புமா என்றாலே நம்மில் பெரும்பாலானோர் தெறித்து ஓடுவோம். ஆனால் உப்புமாவை சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் செய்ய முடியும். சிறுதானிய வகைகளில் ஒன்றான வரகரிசியில் சுவையான உப்புமா செய்யலாம். இது ஆரோக்கியமானதும் கூட. புரதச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, மினரல்ஸ், கொழுப்புச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ், இரும்புசத்து, தையமின், நையஸின் உள்ளிட்ட சத்துக்கள் வரகரிசியில் மிகுதியாக உள்ளன. எனவே இந்த வரகரிசியை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும். தற்போது வரகரிசி உப்மா எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்



  • 1 கப் வரகு

  • 2 கப் தண்ணீர்

  • 2 டீஸ்பூன் எண்ணெய்

  • 1 தேக்கரண்டி கடுகு 

  • 10-12 கறிவேப்பிலை

  • 1 வெங்காயம், நறுக்கியது

  • 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

  • 1/2 அங்குல துண்டு இஞ்சி விழுது

  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • சுவைக்கேற்ப உப்பு

  • 1/4 கப் ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது

  • 1/4 கப் வறுத்த வேர்க்கடலை

  • 1/2 கப் கலந்த காய்கறிகள் (கேரட், பட்டாணி, பீன்ஸ், பச்சை குடமிளகாய், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்றவை)


செய்முறை


1.வரகரிசியை  கழுவி தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

 

2.தண்ணீரை வடிகட்டி ஊறவைத்த வரகரிசியை தனியாக வைக்கவும்.

 

3.ஒரு கடாயில், மிதமான தீயில் எண்ணெயை சேர்த்து சூடாக்கவும்.

 

4. இதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

 

5.கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடிப்பதம் வரும் வரை வதக்கவும்.
 


6. பீன்ஸ், பச்சை குடமிளகாய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட கலவை காய்கறிகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

 

7.ஊறவைத்த வரகரிசியை இதனுடன் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

 

8. இதில் 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கு உப்பு சேர்க்க வேண்டும்.

 

9. இதை நன்றாக கலந்துவிட்டு ஒரு மூடியைக்கொண்டு கடாயை மூடி வைக்க வேண்டும்.

 

10.15-20 நிமிடங்கள் அல்லது  வரகு சரியான பதத்தில் வெந்து தண்ணீர் உறிஞ்சப்படும் வரை வேகவைக்க வேண்டும்.

 

11. இப்பொது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.

 

12.நறுக்கிய புதிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
 

 


மேலும் படிக்க