அமெரிக்காவில் பன்றி இதயம் பொருத்தப்பட்ட மனிதன் 40 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுவாக விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் சிகிச்சையான ஜீனோ உறுப்பு சிகிச்சை என அழைக்கப்படும். இது மிகவும் சவால் நிறைந்த சிகிச்சை என்ற நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மனித உறுப்புகள் கிடைப்பது வெகு அரிதாக உள்ளது. இதனால் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பான அராய்ச்சிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 


அந்த வகையில் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி அங்குள்ள மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் மருத்துவர்கள் குழு, லாரன்ஸ் பேஸ்ட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாக பொருத்தினர். 52 வயதான அந்த நபர் முன்னாள் கடற்படை வீரர் ஆவார். இவரின் இதயம் செயலிழந்த நிலையில் இந்த அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது. 


மேரிலாண்ட் மருத்துவமனை இரண்டாவது முறையாக பன்றியின் இதயத்தை மனிதர்களுக்கு பொருத்தி சாதனப் படைத்தது. சிகிச்சைக்குப் பின் லாரன்ஸ் வழக்கம்போல உடற்பயிற்சி செய்வது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது என வழக்கமான செயல்பாடுகள் எல்லாம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்து காணப்பட்டது. அதேசமயம் வழக்கமாக உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை செய்தால் , நோயாளியின் உடல் அதனை ஏற்க மறுக்கும் அறிகுறிகளையும் காட்டியுள்ளது, ஆனாலும் அதனை லாரன்ஸ், மருத்துவர்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 


இப்படியான நிலையில் லாரன்ஸ் பேஸட் உயிரிழந்துள்ளார். முதல் அறுவை சிகிச்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற்றது. அவர் 2 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருந்தார். ஆனால் லாரன்ஸ் பெனாட் அதை விட குறைவான நாட்கள் மட்டுமே இருந்தது மருத்துவ துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாரன்ஸ் உயிரோடு  இருந்த 6 வாரங்கள் பிசியோதெரபி சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. பன்றியின் இதயத்தில் காணப்பட்ட வைரஸ் லாரன்ஸ் பேஸ்ட் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 




மேலும் படிக்க: Keraleeyam 2023 : கேரளீயம் நிகழ்ச்சியில் கமல், மம்மூட்டி, மோகன்லால்: மேடையை தெறிக்கவிட்ட 3 ஸ்டார்கள்...