உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கண்கவர் வானவேடிக்கை, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட கட்டிடங்கள், என புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர். இந்தாண்டை சிறப்பாக வரவேற்க கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது.
கூகுள் டூடுல்
வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூல் வெளியிடுவது வழக்கம். போலவே, இந்தாண்டு புத்தாண்டிற்கு முந்தைய நாளிலேயே டூடுலை வெளியிட்டிருந்தது. அதில் 2022-இல் இருக்கும் ‘2’ என்பது மட்டும் குதித்துக்கொண்டே இருக்கும்படி அமைந்திருந்தது. கூகுள் என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வண்ண விளக்குகளால மின்னுவது போலவும், அதற்கிடையில் ’2022’ குஷியுடன் ஆடி மகிழ்வதுபோலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
கூகுள் டூடுல் 2023
புத்தாண்டு தினத்தில் அதாவது சரியாக 12 மணிக்கு (00:00) மணிக்கு, டூடுலில் இருந்த ’2022’ -இல் 2 மட்டும் மாறி ‘3’ ஆக மாறியது போன்று GIF வடிவமைக்கப்பட்டிருந்தது. 2022 இல் இருந்த 2 குதித்து குதித்து அங்கு ‘3’ என்ற எண் வருவது போன்று அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும், இரண்டை காணவில்லை என்றதும், மற்ற எண்கள் சோகமாக இருப்பது போலவும், ‘3’ வந்ததும் அவை மகிழ்ச்சியுடன் சிரிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ள டூடுல் பார்ப்பதற்கு மிகவும் அழக்காக இருக்கிறது.
பார்ட்டி பாப்பர்ஸ்
கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி பாப்பர்ஸ் எல்லாருக்கும் விருப்பமான ஒன்று. கூகுள் அதனைப் புரிந்துகொண்டு மிகவும் அழகான பார்ட்டி பாப்பர்ஸை வெளியிட்டுள்ளது. அது இசையுடன் பார்ட்டி பாப்பர்ஸ் வெடித்து ஸ்கிரீன் முழுவதும் பல வண்ணங்களில் ஒளிர்கிறது.
பார்டி கொண்டாடுங்கள்
- Google.com-க்குச் செல்லவும்.
- "New year 2023 " அல்லது "New year's eve" என்று தேடல் பகுதியில் டைப் செய்து பார்க்கவும்.
- திரையின் மேல் இடதுபுறத்தில், தேடல் பகுதியின் கீழே, பார்ட்டி பாப்பர்ஸ் இருக்கும்.
- அனிமேஷன் செய்யப்பட்ட கூம்பு வடிவ பாப்பர்ஸ் மீது கிளிக் செய்யவும்.
- நீங்கள் அதைச் செய்தவுடன், திரையில் சத்தத்துடன் பாப்பர்ஸ் வெடிக்கும்.
- அதிலிருந்து வண்ண வண்ண பார்ட்டி பேப்பர்ஸ் வெட்டித்து திரை முழுவதும் வரும்.
- ஜாலியாக விர்ச்சுவல் புத்தாண்டு கொண்டாடலாம்.
கூகுள் டூடுல் பார்ட்டி பாப்பர்ஸ் - https://www.google.com/doodles/new-years-eve-2022 / http://www.google.com/doodles/new-years-day-2023
மேலும் வாசிக்க..
ABP Wishes: தொடங்கட்டும் புதிய அத்தியாயம்... ABP நாடு சார்பில் புத்தாண்டு வாழ்த்துகள்...!