பி.எம்.டபுள்யு கார் நிறுவன ஊழியர்:
பி.எம்.டபிள்யு கார் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மதிய உணவு வேளையில் பர்கர் கிங் உணவகத்தில் உணவு சாப்பிட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 16 ஆயிரம் பவுண்ட் நஷ்ட ஈடு கிடைத்துள்ளது.
மதிய உணவு வேளையில் பர்கர் கிங் சென்று சாப்பிட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட இளைஞருக்கு மீண்டும் அதே பணி கிடைத்துள்ளதோடு அவருக்கு பெரிய தொகை இழப்பீடாகவும் கிடைத்துள்ளது.
மதிய உணவு:
கடந்த ஜூன் 2018ல், லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பகுதியில் உள்ள பிஎம்டபிள்யு கார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரயான் பார்க்கின்சன் என்பவர் மதிய உணவை பர்கர் கிங்குக்கு சென்று சாப்பிட்டார். அவர் தொழிற்சாலையில் இருந்து பர்கர் கிங் நீண்ட தூரத்தில் இருந்ததால் அவர் மதிய உணவுக்கு சென்றுவர சற்று தாமதமாகிவிட்டது. இதற்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தான் திரும்பி வருவதற்கு கால தாமதமாகும் என்று அவர் சொல்லாமல் சென்றதாலேயே பணி நீக்கம் செய்யப்பட்டார் என்று பிஎம்டபிள்யு நிறுவனம் கூறியது. ஆனால் விசாரணையின் போது ரயான் பார்கின்சன், நான் எனது சக ஊழியர்களுடன் மதிய உணவு பற்றி பேசிக் கொண்டிருந்தேன். எல்லோரும் அன்று கெபாப் சாப்பிட விரும்பினர். நான் அன்று பர்கர் கிங் சாப்பிட ஆசைப்பட்டேன். அதனால் ஒரு ஸ்கூட்டரில் பர்கர் கிங் சென்று திரும்பிவந்து அலுவலக வளாகத்தில் காருக்குள் அமர்ந்து சாப்பிட்டேன்.
இன ரீதியான துன்புறுத்தல்:
ஆனால் ரயான் பார்க்கின்சன், "நான் திரும்பி வந்தவுடன் ஏன் நான் உயர் அதிகாரிகளிடம் சொல்லவில்லை என்று அவர்கள் கோபப்பட்டார்கள். 2019ல் என் மீது விசாரணை கமிஷன் வைத்து என்னை பணி நீக்கம் செய்தனர். ஆனால் இதில் எந்த அத்துமீறலும் இல்லை. என்னைப் போன்று மதிய உணவுக்கு வெளியே சென்றவர்களுக்கு பாதிப்பும் ஏற்படவில்லை. என்னை இன ரீதியாக துன்புறத்தவே இதை செய்தனர்" என்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரயான் பார்க்கின்சன் பக்கம் நியாயம் இருப்பதை உறுதி செய்தது. அவருக்கு 16 ஆயிரம் பவுண்ட் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டதோடு மீண்டும் பணி வழங்கவும் உத்தரவிட்டது.