வாரத்தின் முதல் நாள் ஞாயிறாக இருந்தாலும், அலுவல் ரீதியிலான காலண்டரில் திங்கள்தான் முதல்நாள். திங்கட் கிழமை என்பது நமக்கு பிடித்தமானதா? என்று கேட்டால் பதில் சொல்ல வராது. ஏனெனில், திங்கட்கிழமை பரபரப்பான நாள். வாரத்தின் தொடக்க நாள். வேலைகள் மலை போல குவிந்திருக்கும் நாளாக மாறிவிடும். மன்டே ப்ளூஸ் (Monday Blues) என்றும் சொல்வதுண்டு. திங்கள் கிழமையை எதிர்கொள்ள நமக்கு தனியே ஒரு உத்வேகம் தேவைப்படும் அளவிற்கு திங்கள் கிழமை இருக்கும். 






வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கழிப்போம். ஆனால், திங்கள் கிழமை எப்போதும் ஒரு சுவாரஸ்யமற்ற நாளாக இருக்கும் இல்லையா? கின்னஸ் உலக சாதனை நிறுவனமும் (Guinness World Records) திங்கள் கிழமை சிறப்பான நாள் இல்லை என்று கூறியுள்ளது. ஆம். நம்மை போல பலரின் புலம்பல் கின்னஸ் நிறுவனத்திற்கு கேட்டு விட்டது என்று சொன்னால் மிகையாகாது. கின்னஸ் நிறுவனம் 'worst day of the week' அதாவது ‘வாரத்தின் மோசமான நாள்’ என்று திங்கட்கிழமையை அறிவித்துள்ளது. அப்படா! இனி மனதுக்கு பிடித்ததுபோல திங்கட்கிழமையை திட்டி கொள்ளலாம்.






இதற்கு டிவிட்டரில் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அப்பாடா, இதை கண்டுபிடிக்க இவ்வளவு நாட்கள் ஆனதா என்று பலரும் கேட்டுள்ளனர். பலரும் கின்னஸ் நிறுவனத்தின் இந்த ட்வீட்டிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். 


திங்கட்கிழமை எவ்வளவு கடுப்பானது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு டிவிட்டர் பதிவர் “இதற்குதான் திங்கட்கிழமை நான் வீக் ஆஃப் எடுத்துகொள்வேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். கின்னஸ் நிறுவனமும் இவருடைய கமெண்டிற்கு ‘ புத்திச்சாலிதனம்’ என்று பாராட்டி உள்ளது. 






பலரும் 'Monday Blues' எதிராக டிவிட்டரில் குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.  கின்னஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இனி யாராவது உங்களுக்கு திங்கட்கிழமை பிடிக்குமா என்றால், தைரியமாக சொல்லலாம். ஏனெனில், கின்னஸ் நிறுவனமே அறிவித்தாயிற்று. வாரத்தின் மிக மோசமான நாள்- திங்கள் கிழமைதான்.






இதற்கு சிலர் நகைச்சுவையாக கமெண்ட்களை செய்துள்ளனர். ஒருவர் திங்கட்கிழமையையும் சேர்த்து விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 




மேலும் வாசிக்க...


Jayalalithaa Death Case: “யானையை நரிகள் கொன்றுவிடும்” - ஜெ.மரணம் குறித்த அறிக்கையில் ஆணையம் சொல்வது என்ன?