தொழில்நுட்ப வளர்ச்சியின் நவீன பரிமாணமாக கருதப்படுவது ஏ.ஐ. தொழில்நுட்பம். ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் இந்த தொழில்நுட்பம் வந்த பிறகு பல துறைகளிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ஏ.ஐ. தொழில்நுட்பம்:


ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பலரும் அதற்கு வரவேற்பு தெரிவித்த நிலையில், சிலர் இது மனிதர்களுக்கு ஆபத்தாக முடியும் என்று கண்டனம் தெரிவித்தனர். அதாவது மனிதர்கள் செய்யும் வேலைகளில் மனிதர்களுக்கு பதிலாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் செய்ய முடியும் என்பதால் பலரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று பலரும் எச்சரித்தனர்.


இந்த நிலையில், கூகுள் நிறுவனம்  தங்களது பணியாளர்களுக்கு பதிலாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கூகுள் தங்களது வர்த்த பிரிவு உள்பட பல பிரிவுகளில் உள்ள 30 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


30 ஆயிரம் பேர் பணி நீக்கமா?


இந்தாண்டு தொடக்கம் முதலே லே ஆஃப் எனப்படும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நிகழ்வு முன்னணி நிறுவனங்களான அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் என உலகின் முன்னணி நிறுவனங்களில் அரங்கேறியது. சில மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் 12 ஆயிரம் பேரை பணியை விட்டு நீக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக கூகுளில் பல முக்கிய பிரிவுகள் மட்டுமின்றி பிரதான பிரிவுகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் 30 ஆயிரம் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், அடுத்தாண்டு இந்த நடவடிக்கையை கூகுள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூகுளில் பணிபுரியும் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


மேலும் படிக்க: Human Trafficking: துபாயிலிருந்து புறப்பட்ட விமானம்.. பிரஞ்சு நாட்டில் தரையிறக்கம்.. விசாரணை வளையத்தில் இந்தியர்கள்..


மேலும் படிக்க: Corona JN.1: உலகளவில் வேகமாக பரவும் கொரோனா JN.1 மாறுபாடு! உலக சுகாதார அமைப்பு சொன்ன தகவல் என்ன?