ஐக்கிய அரபு அமிரகத்தில் இருந்து துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 300 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்த விமானம் நிக்கராகுவா தலைநகர் மனகுவாவிற்கு சென்றுக்கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதனை பிரஞ்சு நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.


இந்த விமானம் துபாயில் இருந்து புறப்பட்டது. எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழிநுட்ப கோளாறு காரணமாகவும் பிரஞ்சு நாட்டில் உள்ள வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஒவ்வொரு பயணிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒரே விமானத்தில் அதிக அளவில் இந்திய பயணிகள் பயணம் மேற்கொண்டு வந்ததால் மனித கடத்தல் தொடர்பாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவியல் பிரிவு அதிகாரிகள் மனித கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது கேள்வி கேட்ட இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தலவல் வெளியாகியுள்ளது.






இது தொடர்பாக பாரிஸில் உள்ள இந்திய தூதரகம், “துபாயிலிருந்து 303 பேருடன் நிகரகுவாவுக்குச் சென்ற விமானம் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பயணிகளின் நலனை உறுதி செய்வோம்” என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.


மேலும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் நலனையும் கருத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் மக்கள் இது தொடர்பாக கூறுகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற இவர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.