கல்லுக்குள் ஈரம்.! ஹமாஸ் இயக்கத்தினரின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேலிய பணயக்கைதி.! வீடியோ..

Israel Hamas Hostage: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பணயக்கைதிகள் இரு தரப்பினரும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவித்து வருகின்றனர்.

Continues below advertisement

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்து வந்த போரானது, தற்போது ஒப்பந்தம் மூல்ம் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஒப்பந்தம் மூலம் பணயக்கைதிகளை, இரு தரப்பினரும் விடுவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று 6 பணயக்கைதிகளை ஹமாஸ் இயக்கத்தினர் விடுவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்த இஸ்ரேல்:

இந்நிலையில், இன்று 6 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். அடையாளம் காணப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளாக ஒமர் வெங்கர்ட், ஓமர் ஷெம் டோவ் மற்றும் எலியா கோஹன் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக, இஸ்ரேலிய தரப்பிலிருந்து, 602 பாலத்தீன பணயக்கைதிகளை, இஸ்ரேல் விடுவிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஹமாஸால் நபர்களால், விடுவிப்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது, ஓமர் ஷெம் டோவ் என அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதி ஒருவர், அவர்களை அழைத்து வந்த இரண்டு ஹமாஸ் உறுப்பினர்களின் நெற்றியில் முத்தமிட்டார். இந்நிகழ்வானது, இரு நாட்டினரை மட்டுமன்றி, உலகில் உள்ள பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

இதையடுத்து விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள், இஸ்ரேல் அதிகாரிகளால் வண்டிகள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி:

இதுகுறித்து ஓமரின் தந்தை மல்கி ஷெம் டோவ் பேசுகையில், எனது மகன் ஓமர் மெலிந்தவர்; ஆனால் உற்சாகமானவர், மிகவும் நேர்மறையான எண்ணம் கொண்டவர். அவர் வெளியே வந்து எங்களை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என தெரிவித்தார். இந்நிலையில், விடுவிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளான ஓமர் ஷெம் டோவ், எலியா கோஹன் மற்றும் ஓமர் வென்கெர்ட் ஆகியோர் 505 நாட்கள் ஹமாஸ் பிடியில் நாட்களை கழித்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இப்போது அவர்கள் ஹமாஸ் எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். 

விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் உடல் மற்றும் மன பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில்,இஸ்ரேல் ஹமாச் இரு தரப்பினர் எதிரிகளாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் 500 நாட்களுக்கு மேலாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த போதிலும், விடுவிக்கப்படும் தருணத்தில், அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு , நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Also Read: Pakistan Moon: நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் பாகிஸ்தான்: நல்ல பெயரை சொன்னால் 1 லட்சம் பரிசு!

Continues below advertisement