Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஓவல் அலுவலகத்திற்கு வந்த பொடியன் ஒருவன் அவரை டென்ஷனாக்க, ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.

Continues below advertisement

சமீபத்தில் ட்ரம்ப்பின் ஓவல் அலுவலகத்திற்கு, தனது குடும்பத்துடன் வந்திருந்தார் எலான் மஸ்க். அப்போது மஸ்க்கின் மகன் செய்த காரியத்தால் டென்ஷனான அதிபர் ட்ரம்ப், தனது அலுவலக டேபிள், அதாவது மேஜையை மாற்றியுள்ளார்.

Continues below advertisement

பாரம்பரியமிக்க ஓவல் அலுவலக அதிபர் டேபிள்

அமெரிக்க அதிபர் அலுவலக மேஜை மற்ற அலுவலகங்களில் போடப்படும் மேஜைகள் போல் அல்ல. அந்த மேஜைகளுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. ஓவல் அலுவலகத்திற்கென்று மொத்தமாக 7 மேஜைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த 7 மேஜைகளுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. அதில் எந்த மேஜை வேண்டுமோ, அதை அதிபர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில், தற்போது ஓவல் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த மேஜை, Resolute Desk என அழைக்கப்படுகிறது. இந்த மேஜை, பிரிட்டிஷ் கப்பலான HMS Resolute-ன் பாகத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்த மேஜையை பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா, 1980-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் Rutherford B. Hayes-க்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்க் மகனால் மேஜையை மாற்றிய ட்ரம்ப்

இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க தனது ஓவல் அலுவலக மேஜையை தற்போது ட்ரம்ப் மாற்றியுள்ளார். சமீபத்தில், ஓவல் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் எலான் மஸ்க் வந்திருந்தார். அதிபர் அவர்களை சந்தித்து உரையாடியபோது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மஸ்க்கின் மகன் எக்ஸ் தான். 4 வயதான அவன், எலான் மஸ்க் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, சத்தமிடுவதும், சேட்டைகள் செய்வதுமாய், அதிபர் உட்பட எல்லோரது கவனத்தையும் திசைதிருப்பிக் கொண்டிருந்தான்.

அவனை அறிமுகப்படுத்திய அதிபர் ட்ரம்ப், எக்ஸ் ஒரு அதிக IQ நிரம்பிய தனி மனிதனாக விளங்குவதாக கூறினார். இந்த நிலையில், தனது சேட்டையின் ஒரு பகுதியாக, அதிபரின் மேஜை அருகே நின்றுகொண்டு, தனது மூக்கில் விரலை விட்டு நோண்டிக்கொண்டிருந்தான். அது மட்டுமல்லாமல், அந்த கையை மேஜை மீது வைத்தான் சிறுவன். இதையெல்லாம் ஓரக்கண்ணால் அதிபர் ட்ரம்ப் கவனித்துக் கொண்டேதான் இருந்தார்.


மேஜையை மாற்றி வெள்ளை மாளிகை விளக்கம்

இந்நிலையில், திடீரென தனது மேஜையை மாற்றுமாறு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டதையடுத்து, முன்னாள் அதிபர் புஷ் பயன்படுத்திய C&O Desk தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகள், இது தற்காலிகமான மாற்றம் தான் என்றும், ரெசல்யூட் டெஸ்க்கை தூய்மைப்படுத்துவதற்காக அனுப்பியிருப்பதாகவும், மீண்டும் புதுப்பொலிவுடன் அது திரும்பவும் அதிபரின் மேஜையாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தனது சேட்டையால், ஒரு பொடியன் அமெரிக்க அதிபரின் டேபிளையே மாற்ற வைத்த கதையை என்னவென்று சொல்ல.!!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola