மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.


பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.




இந்த நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தியேட்டர் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே தனது மனைவியுடன் நேரில் சென்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நேரில் பார்த்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவருடன் சில தமிழ் எம்.பி.க்களும் சேர்ந்து பார்த்தனர்.






மகிந்த ராஜபக்சே பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தாண்டு தொடக்கம் முதல் இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு அந்த நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அந்த நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். பல இடங்களில் தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் லட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




அப்போது, நாட்டு மக்களின் போராட்டத்திற்கு பயந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு தப்பியோடியவர் மகிந்த ராஜபக்சே. அப்போது அதிபராக இருந்த அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் நாட்டை விட்டு தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சில வாரங்களுக்கு முன்புதான் நாடு திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Bakasuran Story: மசாஜ் சென்டரில் அரங்கேறும் அட்டுழியங்கள்.. ‘பகாசூரன்’ படத்தின் கதை இதுதான்.. பேட்டியில் போட்டுடைத்த மோகன் ஜி!


மேலும் படிக்க : PathuThala Silambarasan: மாஸ் ப்ளஸ் கிளாஸ்.. ‘பத்துதல’ கர்நாடக படப்பிடிப்பு நிறைவு.. வைரலாகும் சிலம்பரசனின் புகைப்படங்கள்!