Bakasuran Story: மசாஜ் சென்டரில் அரங்கேறும் அட்டுழியங்கள்.. ‘பகாசூரன்’ படத்தின் கதை இதுதான்.. பேட்டியில் போட்டுடைத்த மோகன் ஜி!
‘பகாசூரன்’ படமானது என்ன மாதிரியான கதை என்பதை பற்றி பேசியிருக்கிறார்.

‘பகாசூரன்’ என்ன மாதிரியான கதையம்சம் கொண்டது என்பது பற்றி அந்தப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி பேசியிருக்கிறார்.
இயக்குநர் மோகன்ஜி இது குறித்து பேசும் போது, ‘பகாசூரன்’ படமானது தமிழ்நாடு முழுக்க உள்ள மசாஜ், ஸ்பா போன்றவற்றில் வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்? என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நிறைய உண்மை சம்பவங்கள் இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.
Just In





மேலும் அண்மையில் பகாசூரன் படத்தில் இருந்து ‘காத்தம்மா’ பாடலுக்கு மன்சூர் அலிகான் நடனம் ஆடியிருப்பது பற்றி பேசிய அவர், “ எல்லோருக்கும் தெரியாத விஷயம் மன்சூர் அலிகான் ஒரு நல்ல டான்சர். இந்தப்படத்தில் ‘காத்தம்மா’ பாடல் வரும் இடத்தில் அந்த மாதிரியான அவர் போன்ற ஒரு நடிகர் தேவைப்பட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் தக் லைஃப் மன்சூர் அலிகானாக இருக்கமாட்டார். அவர் உண்மையில் குழந்தை மாதிரியான நபர்.” என்று பேசினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் 'பகாசூரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை இயக்குனர் மோகன்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து ‘பகாசூரன்’ படத்தில் இருந்து முதல் பாடலாக ‘சிவ சிவாயம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக 'காத்தம்மா' பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது காத்தம்மா பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
குத்துப்பாடலாக வெளியாகியிருக்கும் இந்தப்பாடலில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான் நடனம் ஆடியிருக்கிறார்