நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக ஃபின்லாந்து இணைந்துள்ளது.


நேட்டோ அமைப்பு


நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. இது ஆங்கிலத்தில் ’The North Atlantic Treaty Organization’ மற்றும் NATO என்றழைக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா,பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949 ஆம் ஆண்டு இராணுவ கூட்டமைப்பாக உருவாகின. இதன் நோக்கம், இந்த ஒப்பந்தத்தில் இணையும் நாடுகளில் எந்த ஒரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும். இப்போது, புதிதாக இணைந்துள்ள ஃபின்லாந்தோடு சேர்த்து பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து,நார்வே, போர்ச்சுக்கல், அல்போனியா, பெலாரஸ், ஜெர்மனி, போலந்து உள்பட 31 நாடுகள் நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.


நேட்டோவில் ஃபின்லாந்து இணைந்தது


நேட்டோவில் இணைவதற்கு இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக ஒப்புதல் தர வேண்டும். இந்நிலையில், ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பின்னர், பேச்சுவாந்தைக்குப் பிறகு துருக்கி சமரசம் அடைந்துள்ளது. மற்ற நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இப்போது நேட்டோவில் ஃபின்லாந்து இணைந்துள்ளது. இதற்காக ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளது. இப்போது, ஃபின்லாந்துக்கு நேட்டோவின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.


உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு மத்தியில் ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


நேட்டோவில் உக்ரைன் இணைய விண்ணப்பித்த காரணத்தினாலேயே ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. அதனால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் அனைவரும் அறிந்ததே.


இது குறித்து ஃபின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஹவிஸ்டோ கூறுகையில், “இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம். பின்லாந்தைப் பொறுத்தவரை, ரஷ்யா தனது சட்டவிரோத செயல்களைத் தொடர்வதால், உக்ரைனின் நேட்டோ ஆதரவு நிலைப்பாட்டை வலியுறுத்துவது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. யூரோ - அட்லாண்டிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


உன்ரைனின் அண்டை நாடுகளில் ஒன்றான ஃபின்லாந்து இப்போது நேட்டோவில் இணைந்துள்ளது. இது நிச்சயம் ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாகவே இருக்கும். விரைவில் ஸ்வீடனும் நேட்டோவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் வாசிக்க..


Indian 2: விக்ரம் படத்தை தொடர்ந்து "இந்தியன் -2” படத்தில் கமலுடன் இணைந்த முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி


இதையும் படிங்க..


UK tourist: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரிட்டன் பயணி.. மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம்