NASA மற்றும் Canadian Space Agency (CSA) இணைந்து ஆர்டெமிஸ் II பயணத்திட்டத்தில் நிலவுக்கு செல்லும் நான்கு விண்வெளி வீரர்களை அறிவித்தது. முதல் முறையாக பெண் விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் தலைமையில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.  






நிலவை சுற்று ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 1969ல் முதல் முறையாக மனிதனை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பி புதிய தொழில்நுட்பங்களை கொண்டு முழுமையாக ஆராய்ச்சி மேற்கொள்ள ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா துவங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.






இதன் முதல் கட்ட சோதனையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்டெமிஸ் – 1 திட்டம் விண்ணில் செலுத்தப்பட்டது.


ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஓரியன் விண்கலம் பொருத்தப்பட்டிருந்தது. நிலவின் மேல்பகுதியில் நிலைநிறுத்தப்படும் ஓரியன் விண்கலமானது, நிலவின் வான்வெளியில் ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் என ஏற்கனவே கூறப்பட்டது. ஆர்டெமிஸ் - 1 மனிதர்களுக்கு பதிலாக டம்மிக்களை ஏற்றிச் சென்றது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 97 கி.மீ., அருகில் ஓரியன் விண்கலத்தை நாசா பறக்கவிட்டது.


இந்நிலையில் ஆர்டெமிஸ் 2 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 4 விண்வெளி வீரர்களை நாசா அறிவித்துள்ளது. முதல் முறையாக பெண் விண்வெளி வீரரான கிறிஸ்டினா கோச்சை நாசா அறிவித்தது. இவரது தலைமையில் இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக கருப்பிணத்தை சேர்ந்த விண்வெளி வீரரான விக்டர் க்ளோவர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் ரீட் வைஸ்மேன் மற்றும் ஜெரிமி ஹான்சன் என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.


Twitter Logo: ”சொன்னதை செய்வேன் செய்றததான் சொல்வேன்” Blue Bird-க்கு பதில் Doge... லோகோவை மாற்றிய மஸ்க்..