Facebook Bluetick : ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ  மார்க்  சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.


ட்விட்டர் ப்ளூ டிக்


ட்விட்டரில் அதிக அளவிலான பங்குகளை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) வாங்கிய பிறகு நிர்வாக ரீதியாகவும், டிவிட்டர் செயலியின் தொழில்துட்பம் ஆகியவற்றில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.


டிவிட்டரில் போலியான பயனர்களை கண்டறியும் வகையில் வெரிஃபிகேசன் முறையிலும் மாற்றங்களை செய்ய திட்டம் இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார். பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு  மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.


டிவிட்டரில் தற்போது பயனாளர்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு, வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. அதன்படி, நிறுவனங்கள் என்றால் கோல்ட் குறியீடும், அரசுகள் என்றால் கிரே குறியீடும் மற்றும் தனிநபர்களுக்கு ப்ளூ வண்ண டிக் குறியீடும் வழங்கப்படுகிறது.


பேஸ்புக், இன்ஸ்டாகிராம்


ட்விட்டரை தொடர்ந்து, பணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கும் நடைமுறை இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிலும் அறிமுகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களின் தலைமைச் செயல் அதிகாரிகயான மார்க்  சக்கர்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் கட்டணம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.


அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 


”இந்த வாரம் நாங்கள் மெட்டா வெரிஃபைட் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளோம்.  மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும்  பேஸ்புக் பணம் செலுத்தி வெரிஃபைடு கணக்குகளை வாங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளளது. இந்த புதிய அம்சம் எங்களின் சேவைகள் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும். மெட்டா ஃவெரிபைடு தொடர்பாக சாதாரண இணைய தளத்திற்கு 11.99 அமெரிக்கா டாலரும், ios எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தளத்திற்கு மாதம் 14.99 டாலரும் வசூலிப்படும் என்று மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இந்த ப்ளூ டிக் கட்டண சேவை அறிமுகப்படுத்துகிறோம். விரைவில் பல நாடுகளில் இந்த சேவையை அறிமுகப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அதிக அளவில் முதலீடு செய்து வரும் நிலையிலும் எப்படி எல்லாம் மாற்று வருவாயை ஈட்டலாம் என  திட்டம் தீட்டி வரும் சூழலிலும் இந்த சந்தா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Brazil Floods : பிரேசிலை புரட்டி எடுக்கும் கனமழை... சாலைகளில் கரை புரண்டு ஓடிய வெள்ளம்... 23 பேர் உயிரிழந்த சோகம்...!


Baby With Tail : விசித்திரம்.. 6 செ.மீ வாலுடன் பிறந்த குழந்தை... அரிய நிகழ்வு என மருத்துவர்கள் வியப்பு...!