காலங்கள் போக போக மருத்துவத்துறை பல உச்சபட்ச வளர்ச்சியை அடைந்துவ வருகிறது. ஆனால் அதற்கே சவால் விடும் வகையிலும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக குழந்தைகள் வித்தியாசமானதாக பிறக்கின்றன. அதன்படி, இரட்டை குழந்தைகள், இரண்டு தலையுடன் கூடிய குழந்தைகள், கொம்புடன் பிறக்கும் குழந்தைகள், முகச்சிதைவு குழந்தைகள் என பல விசித்திர தோற்றத்துடன் குழந்தைகள் பிறந்து வருகின்றன. என்னதான் புதிய புதிய மருந்துகள் கண்டுபிடித்தாலும், குழந்தைகள் பிறக்கும் போதே அரிதாக பிறந்துதான் வருகின்றனர். அப்படி தான் பிரேசில் நாட்டில் அரியவகை குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
வாலுடன் குழந்தை
பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. 10 மாதங்கள் வயிற்றில் இருந்து சரியான எடையுடன் ஆரோக்கியமாக அந்தக் குழந்தை இருந்துள்ளது. ஆனால், அந்த குழந்தையின் முதுக்குக்கு கிழே உள்ள பகுதியில் 6 செ.மீ நீளத்துடன் ஒரு வால் இருந்துள்ளது. இதை பார்த்த மருத்துவர்கள் ஆச்சிரியம் அடைந்தனர். உலக அளவில் வால்களுடன் சில குழந்தைகள் பிறந்திருந்தாலும் பிரேசில் நாட்டில் இப்படி ஒரு குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாகும்.
6 செ.மீ நீளமுள்ள வால் மிருதுவான தோலால் இருந்துள்ளது. எந்த அசைவு இல்லாத போதிலும் அந்த வாலில் உணர்ச்சிகள் இருந்தது. அதை ஊசியால் குத்திய போது குழந்தை அழுததாக மருத்துவர்கள் கூறினர்.
மருத்துவர்கள் அதிர்ச்சி
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ”இதுபோன்ற குழந்தைகள் பிறப்பது அரிதான ஒன்று. இதற்கு ஸ்பைனா பிஃபிடா (spina bifida) என்ற பெயர். முதுகுத்தண்டு வளர்ச்சி அடையாமல் இருந்தால் இதுபோன்று வாலுடன் குழந்தை பிறப்பதாக கூறப்படுகிறது. முதுகுத்தண்டு வளர்ச்சி அடையாமல் இருந்தால் அதில் ஒரு இடைவெளி உண்டாகும். அந்த இடைவெளியில் (gap) தான் வால் உருவாகுகின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு மற்றும் இடுப்புப் பகுதியை இணைக்கும் லும்போசாக்ரல் (Lumbosacral region) பகுதியில் இருந்து மேல்நோக்கி வால் வளர்ந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண் குழந்தைக்கு 2 மாதங்கள் நிறைவடைந்த பிறகு தான் வால் அகற்றப்பட முடியும் என மருத்துவர்கள் கூறினர்.
இதனை அடுத்து, அந்த வாலில் எலும்புகள் இல்லை. கருப்பையில் உருவாகும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் வால் போன்ற அமைப்பு இருக்கும். பின்னர், அப்பகுதி உடலுக்குள் தானாக சென்றுவிடும். ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை இருந்தால் இதுபோன்று வால் உள்ளே செல்லாமல் வெளியில் தெரியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தை வாலுடன் பிறப்படு இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மெக்சிகோவில் ஒரு பெண் குழந்தை மிகவும் அரிதான 5 செ.மீ நீளமான வாலுடன் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Contact Lens : உஷார் மக்களே..கான்டாக்ட் லென்ஸ் உடன் தூங்கியதால் வந்த வினை.. பார்வைபோன பயங்கரம்..