ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் சீன விண்வெளி நிலையத்தை மோத நெருங்கியது என்பதே அந்த குற்றச்சாட்டு.


”எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இயக்கும் ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கின் செயற்கைகோள்கள், 2021-ம் ஆண்டு ஜூலை 1 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் சீன விண்வெளி ஆய்வு மையத்தை மோத இருந்தது. வலுவான தற்காப்பு கருவி மூலம் விண்வெளி ஆய்வு மையம் தற்காத்து கொள்ளப்பட்டது” என ஐநாவில் சீனா புகார் அளித்திருக்கிறது.


வான்வெளி புவி சுற்றுவட்ட பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்துள்ளது. இதை சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பயன்படுத்தி வரும் நிலையில், சீனா தனக்கென தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தனி விண்வெளி நிலையம் அமைக்கும் பணிக்காக சீன விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், புதிதாக அமைந்து வரும் விண்வெளி நிலைய பணிகளை தடுத்து சீர்குலைக்கும் பணியில் எலான் மஸ்க் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக சீனா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.



மேலும் படிக்க: TN Gold Loan Waiver: நகைக்கடன் தள்ளுபடி புதிய அப்டேட்: 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாதாம்! முழு விபரம் இதோ!


இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், சீனா எலன் மஸ்க் மீதான குற்றச்சாட்டை பொது வெளியில் பதிவு செய்ய ஆரம்பித்தது. அதனை அடுத்து, சீன நெட்டிசன்கள் அமெரிக்காவையும், எலான் மஸ்க்கையும் இணையதளத்தில் சாட ஆரம்பித்துவிட்டனர்.


மாதம்தோறும், ஆயிரக்கணக்கான டெஸ்லா வாகனங்கள் சீனாவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், இனி எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் வெளியிடும் வாகனங்களை வாங்க வேண்டாம் எனவும், டெஸ்லா பொருட்களை சீனா புறக்கணிக்க வேண்டும் எனவும் சீன மக்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 


ஏற்கனவே, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் பல ஆயிரம் செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளது. தொடர்ந்து செயற்கைகோள்களை இயக்கும் திட்டத்தில் இருக்கும் அந்நிறுவனம் மீது சீன நாடு புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண