2021ம் ஆண்டு உலகம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை கீழே காணலாம்.



  1. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி :


கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது.



  1. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் :




உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நடப்பாண்டில் பதவியேற்றார்.



  1. டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு முடக்கம் :


ஜோ பைடனுக்கு முன்பாக அமெரிக்காவை ஆட்சி செய்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்களை பதிவிட்டதால், அவரது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.



  1. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் :




வல்லரசு நாடான முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பு வகித்தார். மேலும், ஜோ பைடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுமார் ஒரு மணி நேரம் மட்டும் அமெரிக்காவின் அதிபர் பொறுப்பையும் கவனித்தார்.



  1. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் :


உலகம் முழுவதும் நடப்பாண்டில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட நிகழ்வு இதுவே ஆகும். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதால், அந்த நாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர். இதனால், அந்த நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து வான்வழியாகவும், தரை வழியாகவும் நாட்டை  விட்டு வெளியேறியது உலகம் முழுவதும் கண்ணீர் சிந்தவைத்தது.





  1. 100 மில்லியன் மக்களுக்கும் மேல் தடுப்பூசி :


கொரோனா வைரசுக்கு எதிரான அரணாக தடுப்பூசி கருதப்பட்டதால், உலகம் முழுவதும் இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.



  1. மீண்டும் திறக்கப்பட்ட கத்தார் – சவுதி அரேபியா எல்லை :


சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே நிலவிய மோதலினால் மூடப்பட்டிருந்த சவுதி அரேபியா மற்றும் கத்தார் எல்லைகள், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் திறக்கப்பட்டது.



  1. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் :




கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.



  1. அமேசான் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து விலகிய ஜெப் பெசோஸ் :


உலகின் மிகப்பெரிய இணையதள வர்த்தக நிறுவனமான அமேசானின் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஜெப் பெசோஸ் விலகுவதாக அறிவித்தார்.





  1. விண்வெளிக்கு சுற்றுப்பயணம் செய்த பொதுமக்கள் :


உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவைச் சார்ந்த விண்வெளி ஆய்வாளர்கள்  அல்லாத நான்கு பேர் விண்வெளிக்கு சுற்றுலா சென்றனர். இவர்களை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றது.



  1. டுவிட்டர் நிறுவனத்திற்கு சி.இ.ஓ.வான இந்தியர் :




டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பொறுப்பு வகித்த ஜேக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்ததால், புதிய சி.இ.ஓ.வாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.



  1. உலகம் முழுவதும் ஒமிக்ரான் :


நடப்பாண்டின் தொடக்கத்தில் டெல்டா வைரஸ் பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்ட உலகம், நடப்பாண்டின் இறுதியில் ஒமிக்ரான் வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண