கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேருக்கு தள்ளுபடி ஆகாது.கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், 28% பேர்களின் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடிக்கு தயாரானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றிந்தால் நகைக்கடன் தள்ளுபடி பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி குறித்த களஆய்வில் சேலம் மாவட்டத்தை தவிர, பிற மாவட்டங்களில் ஆய்வு முடிந்துள்ளதாகவும் தெரிகிறது. 


 






தள்ளுபடி நிராகரிக்கப்பட்ட காரணங்கள் பின்வருமாறு :



  • ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் அவரது குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் இடம்பெற்றிந்தால் நிராகரிக்கப்படும். 

  • நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்கள் அளித்த மனு நிராகரிக்கப்படும்.

  • 40 கிராமுக்கு மேற்பட்டு நகையை கடனாக பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி நிராகரிக்கப்படும்.

  •  40 கிராமுக்கு மேற்பட்டு நகைக் கடன் பெற்ற நபருக்கு தள்ளுபடி நிராகரிக்கப்படும்.

  • கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தள்ளுபடி கிடையாது. 

  • கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தள்ளுபடி கிடையாது. 

  • அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தள்ளுபடி கிடையாது. 

  • குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது 

  • நியாய விலை கடைகளில் எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினருக்கு தள்ளுபடி கிடையாது. 

  • ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமக்கும் கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு தள்ளுபடி கிடையாது. 


Also Read | TN Gold Loan Waiver: யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? பட்டியல் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண