இன்று காலை அதிகாலை 4.15 மணியளவில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகவும், இமயமலையின் சரிவில் உள்ள மாநிலமாகவும் உள்ள சிக்கிமில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
அதையடுத்து, சில மணி நேரங்களிலேயே 6.47 மணியளவில் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஃபைசதாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு இடங்களிலும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது லேசானது என்றாலும், சமீபத்தில் துருக்கி மற்றும் சியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 24,000 க்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளன.
துருக்கி- சிரியா நிலநடுக்கம்:
துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் பகுதியில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டடங்கள் சரிந்தன. இந்த நிலநடுக்கத்தில் இருந்து வெளியே வர மக்கள் முயற்சி மேற்கொள்ள நினைக்கும்போதே, துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா சார்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ தாண்டியதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இந்திய மக்களிடையே சற்று அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Sun Breaks: உடைந்தது சூரியனின் மேற்பரப்பு.. அச்சத்தில் உறைந்த விஞ்ஞானிகள்..! பூமிக்கு ஆபத்தா?