பூமியைச் சுற்றும் 2வது நிலா.! நிலாவுக்கு கிடைத்த புது பிரண்டு.! வானியல் அற்புத நிகழ்வு

Two Moon: வானியலின் ஆச்சர்ய நிகழ்வாக நமது பூமிக்கு இரண்டாவது நிலா கிடைத்துள்ளது.

Continues below advertisement

Second Moon In Tamil: நாம் வாழும் பூமி கோளானது சூரியன் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. நிலவானது, நமது பூமியை சுற்றிக் கொண்டே சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியை நிரந்தரமாக நிலா சுற்றி வருவதால், பூமியின் துணைக்கோளாக நிலவு கருதப்படுகிறது. 

Continues below advertisement

இந்நிலையில், பூமிக்கு கூடுதலாக 2வது நிலா கிடைத்துள்ளது. நமது நிலாவுக்கு ஒரு நண்பர் கிடைத்துள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா!, இரண்டாவது நிலா குறித்து சற்று விரிவாக பார்ப்போம். 

சூரிய குடும்பம்:


விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்தில் 8 கோள்களை தவிர இதர சிறுகோள்களும், குறுங்கோள்களும் மற்றும் சிறுசிறு கற்களும் சூரியனை சுற்றி வருகின்றன. அவ்வப்போதுகூட, நாம் கேள்விப்படுவோம், பூமியை தாக்க வந்த மிகப்பெரிய பாறை விலகிச்சென்றது என்று. அதேபோன்றுதான், தற்போது ஒரு சிறிய குறுங்கோள் என்று அழைக்கும் வகையிலான ஒரு பாறை, பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வந்துள்ளது. அதாவது, நமது நிலா பூமியை சுற்றி வருவது போல, இந்த குறுங்கோளும் பூமியை சுற்றிவர ஆரம்பித்துள்ளது. அதனால், இதை பூமியின் துணைக்கோளாக கருதப்படும் நிலாவைப்போன்று இதுவும் கருதப்படுகிறது. 


புது நிலா:

ஆனால், இது நமது நிரந்தரமான நிலவைப் போன்றது அல்ல, தற்காலிகமானதுதான்.   செப்டம்பர் 29 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்த புது நிலாவானது நவம்பர் 25 வரை ,  சுமார் இரண்டு மாதங்களுக்கு பூமியை சுற்றும். இந்த குறுங்கோளுக்கு 2024 PT5 என பெயரிடப்பட்டுள்ளது. 

இதை அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆய்வுக் குறிப்புகளின்படி, 2024 PT5 பூமியின் தற்காலிக ‘மினி நிலவாக’ இருக்கும் என தெரிவித்துள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நிலாவுக்கு ஒரு நண்பர் கிடைக்க போகிறது என வைத்துக் கொள்ளலாம்.

பார்க்க முடியுமா?

இது வெறும் கண்ணாலோ அல்லது தொலைநோக்கி அல்லது வீட்டு தொலைநோக்கியால் பார்ப்பது கடினம் என்றே வானியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்கான காரணம், அதன் சிறிய அளவுதான்.

2024 PT5 என்ற குறுங்கோளானது, சுமார் 33 அடி (10 மீட்டர்) அகலம் கொண்டதாக நம்பப்படுகிறது. இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இதன் அளவானது மிகவும் சிறியது என்பதால், மிகவும் சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்திலான, தொலைநோக்கி உபகரணங்கள் மூலம் கண்டறியலாம் என்றும் கூறப்படுகிறது.

Also Read: Video: அமெரிக்காவிலுள்ள புயலை வீடியோ எடுத்த சர்வதேச விண்வெளி நிலையம்.! வியக்க வைக்கும் காட்சி.!

மீண்டும் வரும்:


இதுபோன்ற தற்காலிக குட்டி நிலவுகள் காணப்படுவது, இது முதல் முறை அல்ல. 1981 மற்றும் 2022 இல் ஏற்பட்டது என்றும் ,  2024 PT5 குட்டி நிலவானது  2055ல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் வரும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.ஆகையால், நிலாவுக்கு தற்காலிக நண்பர்களாக சில வந்து போவது வழக்கம்தான் என கூறப்படுகிறது. தற்போது பூமிக்கு இருக்கும் நிலாதான் எப்போதும் கூடவே வரும், நிலாவுக்கும் நட்பாக பூமிதான் நிரந்தரம் என்றும் சொல்லலாம். இவைபோன்று, அவ்வப்போது தற்காலிகமாக சில நிலாக்கள் வந்து செல்லக்கூடியவை என்றும் சொல்லலாம்.

Also Read: Sunita Williams: சர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமை பொறுப்பு சுனிதா வில்லியம்சிடம் ஒப்படைப்பு : நாசா அறிவிப்பு.!

 

Continues below advertisement