சர்வதேச விண்வெளி நிலையம்:


 

பூமியில் இருந்து, சுமார் 400 கி,மீ உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையமானது,  பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையமானது 109 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டது, இது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் நீள அளவை ஒத்தது என கூறப்படுகிறது. அதன் எடை 420 டன் இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. இது பூமியைச் சுற்றி, அதிக வேகத்தில் பயணிக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு இருபத்தேழாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இது, சுமார் 90 நிமிடத்திலே பூமியை முழுவதுமாக ஒருமுறை சுற்றி வந்து விடும். அதாவது, ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும்.

 

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை சில நேரங்களில், சிறு புள்ளி வெளிச்சம் போல் வானத்தில் செல்வதை, பூமியிலிருந்து பலர் பார்த்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்புகூட , இந்த விண்வெளி நிலையமானது சென்னையில் தெரிந்ததாகவும் செய்திகள் வந்ததை பார்க்க முடிந்தது.

 

சுனிதா வில்லியம்ஸ்:


 

இந்த விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி , விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். தற்போது இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்சும் அங்கு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புயல் வீடியோ:


 

இந்நிலையில், ஹெலன்  என்கிற புயலானது அமெரிக்காவில் மையம் கொண்டு கடும் மழை பொழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த தருணத்தில் , சர்வதேச விண்வெளி நிலையமானது அமெரிக்காவின் மேலே பறக்கும் போது, ஹெலன் புயலின் மேற்பரப்பானது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியானது, எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. 

விண்வெளியில் இருந்து பூமியின் மேலே இருக்கும் புயலின் காட்சியானது பார்ப்பதற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.